இரவு அதிக நேரம் கண் விழிக்கிறீங்களா?
தூக்கம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். தூங்கும்போது மாத்திரம்தான் ஒரு மனிதனின் உடல் தன்னை உயிர்ப்பித்துக் கொள்கிறது.
அந்த வகையில் பார்த்தால், இன்று அதிகமானோர் சரியான நேரத்தில் உறங்குவதில்லை.
தொழில் சம்பந்தப்பட்ட வேலைகளை செய்தல், தொலைபேசியில் கேம் விளையாடுதல் போன்ற காரணங்களால் இரவு அதிக நேரம் கண் விழிப்போர் அதிகமாகிவிட்டனர்.
இரவில் அதிக நேரம் கண் விழிப்பதனால் மனம் மற்றும் உடல் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படக்கூடும்.
இதயநோய், உடல் பருமன் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகின்றது.
மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்பும் இரத்தம் அழுத்தம் அதிகரிக்கும் வாய்ப்பும் அதிகமாக இருக்கின்றது.
கண்களின் கீழ் கருவளையம், நீரிழிவு நோய், தீராத தசைவலி போன்றன ஏற்படும் அபாயம் அதிகம்.