உடல் எடை அதிகரித்துக் கொண்டே போகின்றதா? அப்போ இரவு உணவில் இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்!
பொதுவாகவே இப்போது பல்வேறு காரணங்களால் பலருக்கும் உடல் எடை அதிகரித்துக் கொண்டிருக்கும் இதனால் பலருக்கும் எடை குறைப்பது தொடர்பில் பல கேள்விகள் இருக்கும் இதற்கு நீங்கள் இரவு உணவை எடுத்துக் கொள்ளும் போது இதனையும் சேர்த்து எடுத்துக் கொண்டால் உங்கள் எடை குறைந்துக் கொண்டே வரும்.
உடல் எடை குறைப்பு
உடல் எடையை குறைக்க பலர் தற்போது உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பலர் உணவு கட்டுப்பாடுகளை பின்பற்றி வருகின்றனர்.
அதிலும் உணவு கட்டுப்பாட்டின் மூலம் உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்கள். ஆரம்பத்தில் கட்டுப்பாட்டில் இருக்கும் போக போக அதன் மேல் இருந்து தீவிரம் இல்லாமல் போகும். விரைவாக உடல் எடையை குறைக்க, சர்க்கரை, மாவுச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவைக் குறைக்க வேண்டும்.
உங்கள் தினசரி உணவில் புரதம், ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் காய்கறிகளைச் சேர்ப்பதன் மூலம் குறைந்த கலோரி மற்றும் நிறைய ஊட்டச்சத்துக்களை பெற முடியும். இதனால் உங்கள் எடையை சீராக பராமரிக்க முடியும்.
இரவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவுகள்
இரவில் ஒரு கைப்பிடி அளவுபாதாம் சாப்பிட்டால் அதில் இருக்கும் குறைந்த கலோரிகள் உங்கள் தசைகளை சரி செய்யும்.
பிரெட் மற்றும் பீனட் பட்டர் வேர்க்கடலையில் டிரிப்டோபன் என்னும் ஒரு வகை அமினோ அமிலம். இது தூக்கத்தை மேம்படுத்துகிறது.
பிரெட் மற்றும் பீனட் பட்டர் ஆகியவற்றை ஒன்றாக உட்கொண்டால், உங்கள் வளர்சிதை மாற்றம் மேம்படும் மற்றும் அதிக கலோரிகள் எரிக்கப்பட்டு எடையும் விரைவில் குறையும்.
வாழைப்பழத்தில் நார்ச்சத்து உள்ளது. இது நீண்ட நேரம் வயிற்றை நிரம்பி இருக்க உதவுகிறது. வாழைப்பழத்தில் மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது. இது தசைகளை தளர்த்துவதுடன் மன அழுத்தம் மற்றும் பிடிப்புகளையும் குறைக்கிறது. இது குறைந்த கலோரி கொண்டுள்ளதோடு புரதம் நிறைந்த சத்தான உணவாக உள்ளது.
மேலும், இரவு உணவில் ஒரு கிண்ணம் தயிர் சேர்த்துக் கொண்டால், உங்கள் செரிமான பிரச்சனை தீரும்.
இரவு உணவிற்கு ஓட்ஸ் மற்றும் தினை வகைகளை உட்கொள்ளலாம். காய்கறி உப்மா, தவா பனீர், வறுத்த, வேகவைத்த, பச்சை காய்கறிகள், காய்கறி இட்லி, சியா விதை புட்டு மற்றும் காய்கறிகளுடன் ராகி மா ரொட்டி ஆகியவை நன்மை பயக்கும்.