படு ஸ்லிம்மான ஒற்றை புகைப்படத்தை வெளியிட்ட குஷ்பு- ஒட்டுமொத்த ரசிகர்களும் அதிர்ச்சி
தமிழ் சினிமாவின் 90ஸ் காலக்கட்டத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் தான் குஷ்பு.
அழகு, திறமை, நடிப்பு, நடனம் ஆகியவற்றால் பல மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
எந்த நடிகைக்கும் கட்டாத அளவுக்கு குஷ்புவுக்கு மட்டும் தான் கோவில் கட்டியிருக்கின்றனர் ரசிகர்கள்.
இதனையடுத்து, இரண்டு தலைமுறை நடிகர்களோடு நடித்து, இன்னும் மூன்றாவது தலைமுறை நடிகர்களோடு நடித்துக் கொண்டிருக்கும் குஷ்பு சினிமா, அரசியல் இரண்டிலும் செம்ம பிஸியாக உள்ளார்.
சமீப காலமாக தனது உடல் எடையை குறைக்க அதிக கவனம் எடுத்துள்ளார். அதேப்போல் கொரோனா லாக்டவுனுக்கு பின்பு உடல் எடையை குறைத்து ரசிகர்களுக்கு செம்ம ஷாக் கொடுத்தார்.
இந்நிலையில், தற்போது குஷ்பு ட்விட்டர் பக்கத்தில் மாற்றி இருக்கும் புகைப்படத்தை கண்டு ரசிகர்கள் வாயடைத்துபோயுள்ளனர்.
அந்த புகைப்படத்தில் மிகவும் ஒல்லியாகவும் அழகாகவும் உள்ளார். தற்போது குஷ்புவின் அழகிய தோற்றம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.