நீரிழிவு நோயாளிகளுக்கு கறிவேப்பிலை செய்யும் அற்புதம்! யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?

Curry Leaf Healthy Food Recipes
By Manchu Apr 29, 2022 06:10 AM GMT
Manchu

Manchu

Report

சமையலறையில் முக்கிய இடத்தினை பிடித்திருக்கும் கருவேப்பிலை உணவின் மணத்தை அதிகரிப்பதுடன், சுவையையுடம் கூட்டுகின்றது.

கருவேப்பிலை :

கறிவேப்பிலை என்பது கறிவேப்பிலை மரத்தின் இல்லையாகும். கறிவேப்பிலை மரத்தின் அறிவியல் பெயர் முர்ராயா கோயனிகி (Murraya koenigii) ஆகும்.

இது இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டதாகும். அதன் இலைகள் மருத்துவ மற்றும் சமையல் பயன்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. அவை மிகவும் நறுமணமுள்ளவை மற்றும் தனித்துவமான சுவை கொண்டவை.

நீரிழிவு நோயாளிகளுக்கு கறிவேப்பிலை செய்யும் அற்புதம்! யாரெல்லாம் சாப்பிடக்கூடாது? | Curry Leaf Benefits In Tamil  

கண் பார்வை அதிகரித்து தலைவலி வருவதை தடுக்க... எளிய உணவுகள் இதை சாப்பிடலாம் 

கறிவேப்பிலையில் உள்ள சத்துக்கள்

100 கிராம் கறிவேப்பிலையில் 108 கலோரிகள் உள்ளன. மேலும் கார்போஹைட்ரேட் 18.7 கிராம், நார்ச்சத்து 6.4 கிராம், புரதம் 6.1 கிராம், கொழுப்பு 1 கிராம் உள்ளது.

100 கிராம் கருவேப்பிலையில் கால்சியம் 830 மி.கி, பாஸ்பரஸ் – 57 மி.கி, இரும்பு 0.93.மி.கி, தாமிரம் – 0.1 மி.கி, மக்னீசியம் 44 மி.கி, துத்தநாகம் 0.2 மி.கி, மாங்கனீசு 0.15 மி.கி, குரோமியம் 0.006 மி.கி, உள்ளன.

மேலும் வைட்டமின்களான தியாமின் 0.080 மி.கி, கரோட்டின் 7560 μg, ரிபோஃப்ளேவின் 0.210 மி.கி, நியாசின் 2.3 மி.கி, வைட்டமின் சி 4 மி.கி, ஃபோலிக் அமிலம் 93 μg உள்ளது.

நீரிழிவு நோயாளிகளுக்கு கறிவேப்பிலை செய்யும் அற்புதம்! யாரெல்லாம் சாப்பிடக்கூடாது? | Curry Leaf Benefits In Tamil

உங்கள் முகத்தில் தோல் உரியுதா? இதனை போக்க இவற்றை பின்பற்றினாலே போதும்! 

கறிவேப்பிலை நன்மைகள்

கறிவேப்பிலை சாப்பிட்டால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பது பெரும்பாலான வர்களுக்கு தெரியாது. கறிவேப்பிலை அதன் மருத்துவகுணங்களுக்காகவும் சுவைக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

ரத்தசோகை நீங்க

கறிவேப்பிலை இரும்புச்சத்தின் சிறந்த மூலமாகும். மேலும் கருவேப்பிலை உட்கொள்வது இரத்த சோகையால் பாதிக்கப்படுபவர்களுக்கு நன்மை பயக்கிறது.

மேலும் கருவேப்பிலையில் உள்ள ஃபோலிக் அமிலம் இரும்பை உறிஞ்சுவதற்கு உடலுக்கு உதவுகிறது. ஃபோலிக் அமிலம் குறைபாடு காரணமாக இரும்புச்சத்து சரியாக உறிஞ்சப்படாமல் உடலில் இருந்து வெளியேற்றப்படுகிறது.

நீரிழிவு நோயாளிகளுக்கு கறிவேப்பிலை செய்யும் அற்புதம்! யாரெல்லாம் சாப்பிடக்கூடாது? | Curry Leaf Benefits In Tamil

உணவில் அதிக உப்பு சேர்ப்பதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன தெரியுமா? 

இதயத்திற்கு ஆரோக்கியம்

கறிவேப்பிலை உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைக்க உதவுகிறது. மேலும் எடை இழப்புக்கு உதவுகிறது.

இது இதயத்தில் இருந்து அதிகப் படியான அழுத்தத்தை நீக்குகிறது. கறிவேப்பிலையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த

கறிவேப்பிலையின் குறிப்பிடத் தக்க நன்மைகளில் ஒன்று நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுவதாகும்.

கறிவேப்பிலையில் தாமிரம், இரும்பு மற்றும் துத்தநாகம் போன்ற தாதுக்கள் உள்ளன. இது இரத்த குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்துவதில் நன்மை பயக்கும் சத்துக்களாகும்.

கறிவேப்பிலை இன்சுலின் செயல்பாட்டை தூண்டுவதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

எனவே நீரிழிவு நோயாளிகள் கண்டிப்பாக தங்கள் வழக்கமான உணவில் கறிவேப்பிலையைச் சேர்ப்பது நல்லது.

நீரிழிவு நோயாளிகளுக்கு கறிவேப்பிலை செய்யும் அற்புதம்! யாரெல்லாம் சாப்பிடக்கூடாது? | Curry Leaf Benefits In Tamil

இந்த ஒரு காயை சாப்பிட்டால் இதயம், சிறுநீரகம், கல்லீரல் ஜம்முன்னு இருக்கும்! நிம்மதியா இருங்க 

வயிற்று பிரச்சினையை தீர்க்க

ஆயுர்வேத மருத்துவத்தில், கறிவேப்பிலையில் லேசான மலமிளக்கி குணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இது உடலில் உள்ள பித்த அளவை சமன் செய்யும் என்று கூறப்படுகின்றது.

கறிவேப்பிலைக்கு கார்மினேடிவ் தன்மை உள்ளது. அதாவது எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி, மூலநோய், மலச்சிக்கல் போன்ற இரைப்பை குடல் பிரச்சினைகளை குணப்படுத்த உதவுகிறது.

அஜீரணத்தைப் போக்க, சிறிது கறிவேப்பிலை மற்றும் எலுமிச்சை சாற்றை கலந்து வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். கறிவேப்பிலையை அரைத்து மோரில் கலந்து வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

அன்னாசி பழத்தை அதிகமாக சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? 

கண்களுக்கு நல்லது 

கறிவேப்பிலையில் அதிக அளவு வைட்டமின் ஏ உள்ளது. வைட்டமின் ஏ யில் கார்னியா மற்றும் கண் மேற்பரப்பைப் பாதுகாக்கும் கரோட்டினாய்டுகள் உள்ளன.

இது கண் ஆரோக்கியத்திற்கு அவசியம் ஆகும். இது கண்புரை போன்ற கண் பிரச்சனைகளுக்கு பயனுள்ளதாக உள்ளது. மேலும் விழித்திரையை ஆரோக்கியமாக வைத்து, பார்வை இழப்பைத் தடுக்கிறது.

நீரிழிவு நோயாளிகளுக்கு கறிவேப்பிலை செய்யும் அற்புதம்! யாரெல்லாம் சாப்பிடக்கூடாது? | Curry Leaf Benefits In Tamil

மன அழுத்தத்திலிருந்து விடுபட

கறிவேப்பிலை எண்ணெய் மன அழுத்தத்தின் அறிகுறிகளை குறைக்க உதவுகிறது. மன அழுத்தம், மனநிலை கோளாறு மற்றும் உடல் ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு ஒரு முக்கிய காரணமாக அமைகிறது.

கறிவேப்பிலையில் உள்ள லினலூலை உள்ளிழுப்பது கவலை, மனஅழுத்தம் மற்றும் மனச்சோர்வுக்கு உதவுகிறது என்று ஆய்வுகள் காட்டுகின்றன.

தொடை வரை இப்படியா பேண்ட்டை கிழித்து விடுவாங்க? லொஸ்லியாவின் புகைப்படத்தால் மிரட்டு போன ரசிகர்கள் 

முடி வளர்ச்சிக்கு உதவும்

கறிவேப்பிலை முடி வளர தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களையும் கொண்டுள்ளது. கறிவேப்பிலையை தவறாமல் உட்கொள்வது முடியை பலப்படுத்துகிறது, பொடுகை குணப்படுத்துகிறது மற்றும் இளவயதில் நரைமுடி பிரச்சியிலிருந்து விடுவிக்கின்றது.

நீரிழிவு நோயாளிகளுக்கு கறிவேப்பிலை செய்யும் அற்புதம்! யாரெல்லாம் சாப்பிடக்கூடாது? | Curry Leaf Benefits In Tamil

காயங்களை ஆற்றும் கருவேப்பிலை

கறிவேப்பிலை தோல் பராமரிப்புக்கும் உதவுகிறது. கறிவேப்பிலை பேஸ்ட் அல்லது சாறு தீக்காயங்கள், வெட்டுக்கள், காயங்கள், தோல் எரிச்சல், தடிப்புகள் மற்றும் பூச்சி கடி ஆகியவற்றிற்கு மெரபூச்சாக பயன்படுத்தப்படுகிறது.

இது காயங்களை சுத்தப்படுத்தவும், விரைவாக ஆற வைக்கவும் உதவுகிறது. கறிவேப்பிலையில் உள்ள கார்பசோல் ஆல்கலாய்டு என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணப்படுத்தும் செயல்முறையை துரிதப்படுத்த உதவுகிறது.

ஆல்கலாய்டுகள் காயங்களில் உள்ள இடைவெளியை குறைத்து பாதிக்கப்பட்ட பகுதியில் முடி வளர்ச்சியை மீட்டெடுக்க உதவுகின்றன. கறிவேப்பிலை தோல் அழற்சி, மற்றும் தீக்காயங்கள் ஆகியவற்றை குணப்படுத்தும் பண்பை கொண்டுள்ளது.

விஷமாகும் தேன்! இந்த பொருளுடன் தயவு செய்து சாப்பிடாதீங்க 

கறிவேப்பிலை தீமைகள்

கறிவேப்பிலை பொதுவாக பாதுகாப்பானது என்றாலும் அதிக அளவில் உட்கொள்வது வயிற்றில் அமிலத்தன்மை போன்ற சில பக்க விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

இது வயிற்றில் எரியும் உணர்வு, வயிற்று வலி மற்றும் குமட்டல் ஆகியவற்றை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. கறிவேப்பிலை ஒவ்வாமை இருந்தால் அதை தவிர்க்க வேண்டும்.

கர்ப்பிணிகள், தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் கறிவேப்பிலை அதிக அளவு பயன்படுத்துவதற்கு முன், பயிற்சி பெற்ற மருத்துவப் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று கொள்ள வேண்டும்.   

நீரிழிவு நோயாளிகளுக்கு கறிவேப்பிலை செய்யும் அற்புதம்! யாரெல்லாம் சாப்பிடக்கூடாது? | Curry Leaf Benefits In Tamil

நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கும் பச்சை பூண்டு - எப்படி சாப்பிடலாம்? 

கறிவேப்பிலை தேநீர்

கறிவேப்பிலையை கொண்டு உங்கள் முடிக்காக தேநீர் தயாரிக்கலாம். கறிவேப்பிலையை தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள்.

அந்த சாற்றில் எலுமிச்சையை பிழிந்து, அதனுடன் கொஞ்சம் சர்க்கரையையும் கலந்து கொள்ளுங்கள்.

இந்த தேநீரை ஒரு வார காலத்திற்கு, தினமும் குடித்து, அதனால் கிடைக்கும் பலனை கண்கூடாக காணலாம்.

உங்கள் முடி வளர்ச்சி கண்டிப்பாக அதிகரிப்பதுடன், பளபளப்பாகவும், நரை முடி பிரச்சினையிலிருந்தும் விடுபடலாம்.

நீரிழிவு நோயாளிகளுக்கு கறிவேப்பிலை செய்யும் அற்புதம்! யாரெல்லாம் சாப்பிடக்கூடாது? | Curry Leaf Benefits In Tamil

தயிருடன் கறிவேப்பிலை பேஸ்ட்

கொஞ்சம் கறிவேப்பிலையை எடுத்துக் கொண்டு பேஸ்ட் ஒன்றை தயார் செய்யுங்கள். இந்த கறிவேப்பிலை பேஸ்ட்டை தயிருடன் கலந்து, முடியின் மீது மசாஜ் செய்யவும்.

இந்த கலவையை 20-25 நிமிடங்கள் அவரை அப்படியே விட்டு விடுங்கள். பின் மிதமான ஷாம்புவை கொண்டு கழுவுங்கள்.

இந்த மாஸ்க்கை ஒவ்வொரு வாரமும் தவறாமல் பயன்படுத்தி வந்தால், முடி வளர்ச்சியில் உடனடி பலனை காணலாம். முடி வளர்ச்சி போக, உங்கள் முடியை பளபளப்பாகவும் மென்மையாகவும் இது மாற்றும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு கறிவேப்பிலை செய்யும் அற்புதம்! யாரெல்லாம் சாப்பிடக்கூடாது? | Curry Leaf Benefits In Tamil

மளமளவென சரிந்த தங்கம் விலை! வாங்க சரியான நேரம்

கறிவேப்பிலை எண்ணெய்

நற்பதமான கறிவேப்பிலைகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதனை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து ஒரு கிண்ணத்தில் போடவும்.

கருப்பு நிறம் அதிகம் காணும் வரை, இந்த இரண்டையும் கொதிக்க விடவும். அதன் பின், அது குளிர்ந்த பின்னர், அதனை எடுத்து உங்கள் தலைச்சருமத்தில் நேரடியாக தடவிக் கொள்ளவும்.

ஒரு மணி நேரத்திற்கு அதை அப்படியே விட்டு விடுங்கள். பின் மிதமான ஷாம்புவைக் கொண்டு கழுவுங்கள்.

இந்த டானிக்கை வாரம் இருமுறை பயன்படுத்தினால், வெறும் 15 நாட்களிலேயே நீங்கள் மாற்றத்தை காணலாம்.

நீரிழிவு நோயாளிகளுக்கு கறிவேப்பிலை செய்யும் அற்புதம்! யாரெல்லாம் சாப்பிடக்கூடாது? | Curry Leaf Benefits In Tamil

கறிவேப்பிலை இட்லி பொடி

கறிவேப்பிலை இட்லி பொடி செய்யத் தேவையான பொருட்கள்

கறிவேப்பிலை – அரை கப்

கடலை பருப்பு – 1 டீ ஸ்பூன்

உளுந்தம் பருப்பு – 1 டீ ஸ்பூன்

மிளகு – அரை டீ ஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 2

பூண்டு – 4 பற்கள்

பெருங்காயத் தூள் – சிறிதளவு

எண்ணெய், உப்பு – தேவைக்கு ஏற்ப

புருவங்கள் நன்கு அடர்த்தியாக வளர வேண்டுமா? இதோ சூப்பரான அழகு குறிப்புகள் 

செய்முறை

வாணலியை சூடாக்கி சிறிதளவு எண்ணெய் விட்டு அதில் கறிவேப்பிலையை கொட்டி வறுக்கவும்.

பின்னர் கடலைப் பருப்பு, உளுந்தம் பருப்பு, மிளகாய் ஆகியவற்றை கொட்டி வறுத்துக்கொள்ளவும்.

வறுத்த கறிவேப்பிலையை மிக்சியில் கொட்டி அரைக்கவும். பிறகு அதனுடன் கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, உப்பு, பூண்டு, மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து அரைக்கவும். இப்போது சுவையான கறிவேப்பிலை பொடி ரெடி.

எளிதில் கெட்டுப் போகாத இந்த இட்லி பொடியை சில வாரங்கள் வரை வைத்து பயன்படுத்த முடியும்.   

நீரிழிவு நோயாளிகளுக்கு கறிவேப்பிலை செய்யும் அற்புதம்! யாரெல்லாம் சாப்பிடக்கூடாது? | Curry Leaf Benefits In Tamil




10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, Toronto, Canada

01 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், Scarborough, Canada

03 Aug, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர் முல்லைப்பிலவு, Berlin, Germany

04 Jul, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, இணுவில் கிழக்கு, கொழும்பு, Scarborough, Canada

30 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

திருகோணமலை, மீசாலை கிழக்கு

01 Aug, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை கிழக்கு, London, United Kingdom

29 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Paris, France

25 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 6ம் வட்டாரம், Ajax, Canada

30 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, Niederkrüchten, Germany

01 Aug, 2024
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Jul, 2025
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US