உடல் எடையை தாறுமாறாக குறைக்கும் பச்சை மிளகாய்: யாரெல்லாம் சாப்பிடக்கூடாது தெரியுமா?
நாம் அன்றாட உணவில் காரம் என்று ஒதுக்கி வைக்கும் பச்சை மிளகாய் உங்களது எடையைக் குறைத்து அழகாக்க பெரிதும் உதவியாக இருக்கின்றது என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
நன்மைகள் என்னென்ன?
பச்சை மிளகாய் காரத்திற்கு மட்டுமல்ல என்பதை நாம் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். இது உடலில் கலோரிகளை எரிந்து கொழுப்பை குறைக்கும் தன்மை கொண்டுள்ளதால் இதனை உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் தாராளமாக சாப்பிடலாம்.
வேகமாக செரிமானம் ஆகும் இது குறிப்பாக புற்றுநோய்க்கு எதிரியாக செயல்படுகின்றது. ஆம் நுரையீரல் புற்று நோயின் அபாயத்தினை குறைக்கின்றது.
பச்சை மிளகாயில் ஆண்டி பாக்டீரியா இருப்பதால் நோய் தொற்றுகள் வராமல் நமது உடம்பை பாதுகாக்கின்றது.
அதுமட்டுமின்றி இதில் வைட்டமின் சி சத்துக்கள் இருப்பதால் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது.
யார் சாப்பிடக்கூடாது?
வயிற்றுப் புண், தொண்டைப் புண், அல்சர் போன்ற பாதிப்புகள் உள்ளவர்கள் அதிகம் பச்சைமிளகாயை எடுப்பது அல்லது முற்றிலும் தவிர்த்தல் நல்லது.
அவ்வாறு நீங்கள் சாப்பிட நினைத்தால் உங்கள் மருத்துவரின் ஆலோசனையின் படி எடுத்துக்கொள்ள வெண்டும்.
அதே போன்று காரத்தன்மை அதிகமாக இருக்கும் பச்சை மிளகாயை அளவுக்கு அதிகமாக உண்பதை தவிர்க்க வேண்டும்.
எவ்வாறு சாப்பிடலாம்?
தமிழர்களின் உணவுகளில் மிக முக்கியம் இடம் பிடித்த பச்சை மிளகாய் அனைத்து கார உணவுகளிலும் இதனை சேர்க்கப்படுகின்றது.
நீங்கள் கார பிரியர்களாக இருந்தால் உங்களுக்கு இது மகிழ்ச்சியான தகவல் என்று தான் கூற வேண்டும். ஆம் பச்சையாகவே சாப்பிடலாம்.
பச்சை மிளகாயை அப்படியே சாப்பிடமுடியாத நபர்கள் முட்டை ஆம்லேட், காய் பொறியல் இவற்றுடன் பொடியாக நறுக்கிய மிளகாயை மேலே தூவிவிட்டு சாப்பிடலாம்.
எனவே நீங்கள் உடல் எடையைக் குறைப்பதற்கு அதிகமாக கஷ்டப்படுபவராக இருந்தால் தாராளமாக பச்சை மிளகாய் எடுத்துக்கொண்டு எளிதில் குறைக்கலாம்.