கிருஷ்ணர் கெட்டப்பில் அசத்தும் கொரிய நபர்! இணையத்தில் ட்ரெண்டாகும் காணொளி
கொரியாவை சேர்ந்த நபரொருவர் கிருஷ்ண ஜெயந்தியில் கிருஷ்ணர் கெட்டப்பில் வெளியிட்டுள்ள காணொளியொன்று இணையத்தில் பெரும்பாலானவர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றது.
குறித்த காணொளி கலாச்சார ஒற்றுமைக்கு ஒரு அழகான எடுத்துக்காட்டு என்று நெட்டிசன்கள் இதை அழைக்கின்றனர், கலாச்சார எல்லைகளுக்கு அப்பால் அன்பு, மரியாதை மற்றும் நல்லிணக்கத்தைப் பரப்பியதற்காக குறித்த கொரிய நபரை அவர்கள் பாராட்டுகிறார்கள்.
இதயங்களைக் கவர்ந்த காட்சி
சமூக ஊடக பயனரால் பகிரப்பட்ட இந்த காணொளியில், வேட்டி, ஆபரணங்கள், மயில் இறகு கிரீடம் மற்றும் புல்லாங்குழல் ஆகியவற்றுடன் உண்மையான கிருஷ்ண உடையில் இருக்கு குறித்த நபரின் அழகிய தோற்றம் தற்போது இணையத்தில் லைக்குகளை அள்ளி வருவதுடன்,சமூக ஊடகங்களில் பாராட்டையும் குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |