இந்தியரை மணந்த வெளிநாட்டு அழகி: உருகவைக்கும் காதல் கதை
பிரேசிலியப் பெண்ணான தைனாஷா (tainashah) தனது குஜராத்தி கணவருடனான பன்முக கலாச்சார காதல் கதையை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
tainashah பதிவு
இன்ஸ்டாகிராம் பதிவில், தைனாஷா குறிப்பிடுகையில், நாங்கள் எங்கள் பன்முக கலாச்சார காதல் கதையைப் பகிர்ந்து கொள்கிறோம், தடைகளை உடைக்கிறோம், நிறவேறுபாடு குறித்து திறந்த மனதுடன் பேசுகிறோம்.
கலாச்சாரங்களைக் கடந்து, ஒரே மாதிரியான கருத்துக்களை ஏற்கின்றோம், மற்றவர்களையும் பன்முகத்தன்மையைத் தழுவ ஊக்குவிக்கும் ஒரு காதலை நாங்கள் கொண்டாடுகிறோம்," என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 2020 ஆம் ஆண்டு COVID-19 தொற்றுநோய் காலத்தில் தாங்கள் இருவரும் முதன்முதலில் ஆன்லைனில் இணைந்ததாக டெய்னா குறிப்பிட்டுள்ளார்.
தடுப்பூசிகள் இல்லாதபோது, அவரது தற்போதைய கணவர் பிரேசிலுக்குச் சென்று அவரைச் சந்தித்தபோது முதல் சந்திப்பு நடந்தது.
“நாங்கள் காதலித்து, சந்தித்த ஐந்து மாதங்களுக்குப் பிறகு திருமணம் செய்துகொண்டோம். உங்களுக்குத் தெரியும், எங்களின் காதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. என குறிப்பிட்டு, புகைப்படங்களுடன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். குறித்த பதிவு தற்போது இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |