உடலில் இருக்கும் கெட்டக் கொழுப்புகளை எல்லாம் விரட்டி அடிக்கும் கொள்ளு மசாலா! எப்படி செய்வது தெரியுமா?
உங்களுக்கு எந்த வியாதி வந்தாலும் அதற்கு கொள்ளு சிறந்த தீர்வாகவே மாறும். கொள்ளில் கல்சியம், மெக்னீசியம், புரதம், இரும்புசத்து, மாவுசத்து, நார்ச்சத்து, பாஸ்போரோஸ், பொற்றாசியம் போன்ற பலவித சத்துக்கள் நிறைந்துள்ளது.
உடல் உறுப்புக்களைப் பலப்படுத்தவும் வயிற்றுப்போக்கு, வயிற்றுப் பொருமல், கண்ணோய்கள் போன்றவற்றையும் கொள்ளு குணப்படுத்தும் அப்படி உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை இது குறைக்கிறது.
அப்படி உடலுக்கு நன்மையை பெற கொள்ளு மசாலா செய்யலாம். ரெசிபி இதோ,
தேவையான பொருட்கள்
கொள்ளு - 1 கிண்ணம்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
இஞ்சி-பூண்டு விழுது - சிறிதளவு
மல்லி தூள் - 1 கரண்டி
மல்லித்தூள் - 1 கரண்டி
மிளகாய்தூள் - 1 கரண்டி
கரம் மசாலா - 1/2 கரண்டி
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி தழை - சிறிதளவு
செய்முறை
முதலில் எடுத்துக் கொண்ட கொள்ளுவை நன்கு வேகவைத்து கொள்ளுங்கள்.
பிறகு தக்காளியையும் தக்காளியையும் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
இப்போது அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து கடுகு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.
எல்லாம் வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா எல்லாம் சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிய விடவும்.
இறுதியில் தேவையான அளவு உப்பு சேர்த்து வேக வைத்த கொள்ளுவை நன்றாக மசித்துக் கொள்ளவும்.
பிறகு மசாலா நன்றாக திக்கான பதம் வந்தவுடன் கொத்தமல்லித் தழையை தூவி இறக்கினால் கொள்ளு மசாலா தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |