2 வாரம் ஆனாலும் கொத்தமல்லி அழுகாமல் புதிதாக இருக்கணுமா? இதோ சூப்பர் ஐடியா
Coriander Leaves
By Nivetha
கொத்தமல்லி நீண்ட நாட்கள் புதிதாக இருப்பதில்லை. வாங்கிய அடுத்த சில நாட்களில் காய்ந்து அழுகும் நிலை உண்டாகிறது.
அதனை குப்பையில் வீசுவது தவிர வேறு வழியில்லை.
ஆனால் இந்த ஆரோக்கியம் மிக்க வாசனைமிக்க கொத்தமல்லியை பாதுகாப்பதற்கான வழி தெரிந்தால், அதன் ஆயுளை இரண்டு வாரம் வரை நீட்டிக்க முடியும்.
உங்கள் வீட்டில் கொத்தமல்லியை ஒரு வாரம்திற்கு மேல் புதிதாக வைத்துக் கொள்ள நாங்கள் கூறும் ஆலோசனையை பின்பற்றுங்கள்.
2 வாரம் ஆனாலும் கொத்தமல்லி அழுகாது
- கொத்தமல்லி கட்டின் வேர்ப்பகுதியை நறுக்கிவிடவும்.
- அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் ஒரு டேபிள்ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து அதில் கொத்தமல்லி தழையை சிறிது நேரம் ஊறவைத்துக்கொள்ளவும்.
- பின்பு நன்றாக கழுவிவிட்டு நிழலிலோ, மின் விசிறியிலோ உலரவைக்கவும்.
- நீர்த்துளிகள் ஏதும் இல்லாமல் நன்கு உலர்ந்திருப்பதை உறுதி செய்த பிறகு பேப்பர் டவலில் ஒற்றி எடுக்கவும்.
- பின்பு கொத்தமல்லி தழையை முழுவதுமாக பேப்பர் டவலை சுற்றி மூடிவிட்டு காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைக்கவும்.
- பின்பு அந்த டப்பாவை பிரிட்ஜில் வைத்துவிட்டு சமையலுக்கு தேவைப்படும்போது கொத்தமல்லி தழையை எடுத்து பரிமாறலாம்.
- சுமார் இரண்டு வாரங்கள் வரை கொத்தமல்லி தழை அழுகாமல் இருக்கும்.
- பேப்பர் டவல் இல்லாவிட்டால் வெள்ளை பேப்பரில் கொத்தமல்லி தழையை நன்றாக சுருட்டிவைத்துவிட்டு காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்துக்கொள்ளலாம்.
மேலே கூறிய வழிகளைப் பின்பற்றுவதால் கொத்தமல்லி இரண்டு வாரத்திற்கு பிறகும், நறுமணத்துடன் அதன் நிறம் மாறாமல் பாதுகாப்பாக இருக்கும்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US