இனி அரிசி மாவிலும் சுவையான மொறுமொறு வடை செய்யலாம்
பொதுவாக உளுந்து மாவைக்கொண்டு பல்வேறு வித்தியாசமான வடைகளைச் செய்யலாம்.
இன்று அரிசி மாவைக் கொண்டு எவ்வாறு வடை செய்யலாம் எனப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பச்சரிசி மா - 200 கிராம்
சீரகம் - 1/2 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 4
கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
பெருங்காயத் தூள் - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சை மிளகாயை பொடிதாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.
அதன்பின்னர் 2 கப் தண்ணீரை கொதிக்கவிட்டு, அதில் சீரகம், பெருங்காயத் தூள், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல், உப்பு என்பவற்றை சேர்க்கவும்.
ஒரு நிமிடத்துக்கு பின்னர் கொத்தமல்லி, அரிசி மாவைத் தூவி கட்டிகளில்லாமல் கிளறி அதில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து மேலும் கிளறி இறக்கி ஆறவிடவேண்டும்.
இந்த மாவில் சிறிதளவு எடுத்து வடைகளாகத் தட்டிவைக்க வேண்டும்.
பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து தட்டி வைத்த மாவை, வடைகளாக போட்டு பொரித்தெடுக்கவும்.