உடல் பலமில்லாமல் இருக்கிறதா? தினமும் இதை செய்து சாப்பிடுங்க
பொதுவாகவே ஒரு சிலருக்கு எதை சாப்பிட்டால் உடம்பில் பலம் இல்லாதது போல தான் இருப்பார்கள்.
அதிலும் வயது செல்ல செல்ல உடம்பு வீக் ஆகிக்கொண்டே தான் இருக்கும் அப்படியானவர்கள் தினமும் கொள்ளு துவையல் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
கொள்ளில் கல்சியம், மெக்னீசியம், புரதம், இரும்புசத்து, மாவுசத்து, நார்ச்சத்து, பாஸ்போரோஸ், பொற்றாசியம் போன்ற பலவித சத்துக்கள் நிறைந்துள்ளது.
அதனால் உடல் எடைக்குறைக்க நினைப்பவர்கள், இந்த கொள்ளு துவையல் சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்
கொள்ளு - 1 கைப்பிடி
தேங்காய் - கால் மூடி
சிவப்பு மிளகாய் - 7
பூண்டு - 6 பல்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் தேங்காயை துருவி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் கனமான பாத்திரத்தில் கொள்ளை சேர்த்து சன்கு வறுத்துக் கொள்ளவும். பின்னர் துருவிய தேங்காய், வறுத்த கொள்ளு, உப்பு, சிவப்பு மிளகாய், பூண்டு அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொண்டால் கொள்ளு துவையல் தயார்.