புற்றுநோய் ஆபத்தை குறைக்கும் கிவி பழம்
பழங்கள் என்று கூறியவுடன் உடனே நம் நினைவுக்கு வருவது அப்பிள்,வாழைப்பழம், மாம்பழம் என்பவைதான்.
இவற்றில் உடலுக்கு தேவையான சக்திகள் காணப்பட்டாலும் நாம் பெரிதாக வாங்கி உண்ணாத கிவி பழத்தில் அதிகளவான சத்துக்கள் உள்ளன.
இதில் அதிகளவான விட்டமின் சி உள்ளது. ஜலதோஷத்தை தடுக்க உதவுவதோடு, நோய் எதிர்ப்பு சக்திக்கும் நல்லது.
யாரெல்லாம் உடல் கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும் என்பதில் அதிக அக்கறை செலுத்துகிறார்களோ, அவர்களெல்லாம் கிவி பழத்தை வாங்கி உண்ணலாம்.
image - Medical news today
ஏனெனில் இதிலுள்ள கலோரிகளின் அளவு மிகவும் குறைவு. அதுமாத்திரமில்லாமல் இதிலுள்ள விட்டமின் சி, நார்ச்சத்து, பொட்டாசியம் என்பன உடலுக்கு பலவிதமான நன்மைகளை அளிக்கக்கூடியது.
கிவி பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன?
- இதயநோய் மற்றும் தொற்று நோய்களின் அபாயத்தை குறைக்கிறது.
- மாரடைப்பு ஏற்படுவதை தடுக்கிறது.
- சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது.
- வயிற்றுப் புண்களை குணப்படுத்துகிறது.
- கர்ப்பிணிப் பெண்களுக்கு நன்மையளிக்கிறது.
- செரிமானத்தை சீராக்குகிறறுது.
- மார்பக புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறைவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
- வயதான அறிகுறிகளை குறைக்கிறது.
- மன அழுத்தத்தை குறைக்கிறது.
- எலும்புகளை வலுவாக்க உதவுகிறது.
- உடலிலுள்ள தேவையற்ற நச்சுக்கள் வெளியேறுகின்றன.
- மூட்டு வலியை போக்குகிறது.
image - cooking light