அடிக்கடி தர்பூசணி பழம் சாப்பிடுபவரா? உங்களுக்கான எச்சரிக்கை பதிவு!
தர்பூசணி பழமானது பல எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளது. இதில் தர்பூசணியில் கிட்டதட்ட 90 சதவீதத்துக்கும் மேல் நீர்ச்சத்து தான் உள்ளது.
வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் சி, வைட்டமின் பி6, பொட்டாசியம், மக்னீசியம், தாதுப்புக்கள் பீட்டா கரோட்டீன் அடங்கியுள்ளன. அதிக அளவில் பொட்டாசியம் நிறைந்திருக்கிறது.
பொட்டாசியம் பற்றாக்குறை எப்படி உயர் ரத்த அழுத்தத்துக்கு ஒரு காரணமாக இருக்கிறதோ அதோபோல அதிகப்படியான பொட்டாசியம் இதயத் துடிப்பை சீரற்றதாக வைத்திருக்கும்.
தர்பூசணி அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது இதயப் பிரச்சினைகள் வராது. உடலில் நீர்ச்சத்துக்கள் அதிகம் உள்ளவர்கள் தர்பூசணியை அதிகமாகச் சாப்பிடக் கூடாது. குறிப்பாக ஆல்கஹால் அதிகம் எடுத்துக் கொள்கிறவர்கள் தர்பூசணி அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
அப்படி எடுத்துக்கொள்பவர்களுக்கு கல்லீரல் வீக்கம் மற்றும் கல்லீரல் கொழுப்புப் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும். தர்பூசணி அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்.
ஆண்களின் ஆண்மை சக்தியை அதிகரிக்க தர்பூசணி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. சாப்பிடும் முறை விதையை லேசாக வறுத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட வேண்டும்.
அப்படியில்லாமல் காய்ந்த விதைகளையோ அல்லது பச்சையாகவோ அதிகம் சாப்பிட்டுவிட்டால் டயேரியா ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.