மாரடைப்பை தடுக்கும் கிவி பழம்... ஒரு நாளைக்கு எத்தனை சாப்பிட்ட வேண்டும்?
கிவி பழம் சாப்பிடுவதற்கும் மிகவும் சுவையாக இருக்கும். இதய நோய், இரத்த அழுத்த பிரச்சனை மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு கிவி மிகவும் நன்மை பயக்கும்.
கிவி சாப்பிடுவது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. கிவி சாப்பிடுவதால், சருமம் பளபளப்பாகும், சுருக்கங்கள் நீங்கும்.
இந்த பழம் 50 விதமான வகைகளில் கிடைக்கிறது. கிவி பழத்தின் முழு பலனும் மாத்திரை வடிவில் கூட கிடைக்கின்றன. கிவி பழம் பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும் அதன் நன்மைகள் மிகவும் பெரியது.
இது முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழமாகும். இந்த பழுப்பு நிற பழம் இனிப்பு சுவையுடன் புளிப்பை அளிக்கக் கூடியது.
இந்த பழத்தில் விட்டமின் சி, விட்டமின் கே, விட்டமின் ஈ, போலேட் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் காணப்படுகிறது.
இரத்தம் உறைதலை தடுக்கும்
கிவி பழம் கொழுப்பின் அளவைக் குறைப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இவை இரத்தம் உறைவதை தடுக்கவும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
எனவே இந்த பழம் இரத்த கொழுப்புகளால் ஏற்படும் தீங்கை தடுக்கிறது. குறிப்பாக இதய பிரச்சினையை தடுக்க அஸ்பிரின் மாத்திரைகள் வழங்கப்படும்.
செரிமான பிரச்சினைக்கு
கிவியில் அதிகளவு நார்ச்சத்துக்கள் காணப்படுகிறது. இது செரிமானத்திற்கு நன்மை பயக்கும். கிவியில் நார்ச்சத்துக்களை தவிர கிவி ஆக்டினிடின் என்ற நொதியைக் கொண்டுள்ளது.
இவை வயிற்றில் உள்ள புரதங்களை திறம்பட உடைக்க உதவுகிறது. எனவே அதிக உணவிற்கு பிறகு சீரண சக்திக்காக கிவியை எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.
பார்வை திறனை பாதுகாக்கும்
கிவி பழமானது கண்களை மாகுலார் சிதைவில் இருந்து காக்கிறது. ஆராய்ச்சியின் படி தினமும் 3 வேளையும் கிவி போன்ற பழங்களை உட்கொள்வது கண் பார்வை சிதைவை 36% ஆக குறைக்கிறது.
டி. என். ஏ குறைப்பாட்டை சரி செய்ய
கிவி பழம் டி. என். ஏ குறைப்பாட்டை சரி செய்கிறது. கிவி சாப்பிடுவது பெருங்குடல் புற்றுநோயை தடுக்கும்.
பெரும்பாலான புற்றுநோய் சிகிச்சை முறைக்கு கிவி ஒரு சிறந்த உணவாக அமைகிறது.
கொழுப்பை குறைக்க
கொழுப்பின் அளவை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது கிவி. இது இரத்த உறைதலைத் தவிர்க்கவும், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
இருதய மற்றும் ரத்த சம்பந்த நோய்கள் வராமல் இருக்க கிவி பழத்தை சாப்பிடுவது நல்லது.
இதய நோய் தடுக்க
ஒரு நாளைக்கு 3 கிவி சாப்பிடுவதால், டயஸ்டாலிக் மற்றும் சிஸ்டாலிக் இரத்த அழுத்தம் குறைகிறது. கிவியில் லுடீன் என்ற ஆன்டிஆக்ஸிடன்ட், வைட்டமின் சி உள்ளது.
இது ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற நோய்களைத் தடுக்கிறது.
medicalnewstoday
முதுமை செயல்பாட்டை குறைக்க
கிவி ப்ரூட்டில் அதிக அளவில் உள்ள ஆண்டி ஆக்ஸிடன்டான வைட்டமின் சி உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.
இது இளமையோடு வைத்திப்பது மட்டுமல்லாமல் புற்றுநோய் போன்ற நாள்பட்ட நோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கவும் அல்லது தாமதப்படுத்தவும் உதவுகிறது.
தோல் ஆரோக்கியம்
கிவிப் பழம் வைட்டமின் சி யின் சிறந்த மூலமாகும். இது இயற்கையாகவே கொலாஜன் உற்பத்தியைத் தூண்டும் ஒரு முக்கியமான ஆக்ஸிஜனேற்றியாகும்.
கிவி பழத்தில் உள்ள வைட்டமின் சி சருமத்தை உறுதியாகவும் இளமையாகவும் வைத்திருக்க உதவுகிறது.
ஆஸ்துமா
கிவியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஆஸ்துமாவை குணப்படுத்த உதவுகிறது. எனவே, ஆஸ்துமா நோயாளிகள் தினமும் கிவியை உட்கொள்ள வேண்டும்.
ca.style
தீமைகள்
-
கிவி பழங்கள் பொதுவாக ஒவ்வாமை எதிர்விளைவுகளை ஏற்படுத்துவதாக சொல்லப்படுகிறது.
-
குறிப்பாக பழம் சாப்பிட்ட பிறகு வாய், உதடுகள், நாக்கு மற்றும் தொண்டை பகுதிகளில் கூச்ச உணர்வு, அரிப்பு ஏற்பட்டால் ஒவ்வாமை உள்ளதாக அர்த்தம்.
-
மேலும் சாப்பிடுவதை உடனடியாக நிறுத்தி மருத்துவரிடம் அலர்ஜி பரிசோதனை செய்து உறுதிப்படுத்தவும்.
-
குழந்தைகளுக்கு குறைந்தது 8 மாதங்கள் வரை கிவி கொடுக்க கூடாது.
-
கிவி பழத்தின் கட்டுப்பாடற்ற நுகர்வு தோல் தொடர்பான பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.
-
கிவி பழத்தை உட்கொள்வதன் மூலம் சிலருக்கு தோல் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
-
கிவியின் அதிகப்படியான நுகர்வு தொண்டை புண்களை ஏற்படுத்துகிறது.
-
கிவி பழத்தை உட்கொண்டதன் விளைவாக ஒவ்வாமை ஏற்பட்டால் கிவி பழம் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
- கிவி பழம் சிலருக்கு ஒவ்வாமை எதிர்வினைகளை ஏற்படுத்தக்கூடும்.
- இதனால் தொண்டை அரிப்பு, நாக்கில் வீக்கம், விழுங்குவதில் சிரமம் மற்றும் வாந்தி ஏற்படுகின்றது.