Viral video: தாகத்தில் வாடும் ராஜநாகத்துக்கு தண்ணீர் கொடுத்த நபர்... இறுதியில் என்ன நடந்தது?
நபரொருவர் உச்சக்கட்ட பயத்துடன் ராஜ நாகத்துக்கு குழாய் மூலம் தண்ணீர் வழங்கும் பதரவைக்கும் காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாகவே ராஜநாகங்கள் மற்ற பாம்புகளுடன் ஒப்பிடுகையில் அதிக விஷத்தன்மை கொண்டவையாகவும் கூடுகட்டி முட்டை இடும் பழக்கம் உடையதாகவும் இருக்கும்.
இது சுமார் 13 அடி முதல் 22 அடி நீளம் வரை வளரக்கூடியது. இவை மற்ற நாக பாம்புகளை விட அத புத்தி கூர்மை கொண்டது என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
பொதுவாக அடர்ந்த காட்டுப்பகுதிகளிலேயே வாழும் இந்த வகை பாம்புகள், மற்ற பாம்புகளையே பெரும்பாலும் உணவாகக் உட்கொள்ளும். விஷ பாம்புகளே ராஜ நாகத்தை பார்த்து பயப்படும்.
இதன் நஞ்சின் கடுமையானது ஒரே கடியிலேயே ஒரு மனிதனைக் கொல்லக்கூடியது.இவ்வளவு கொடிய விஷம் கொண்ட ராஜ நாகத்துக்கு நபரொருவர் தண்ணீர் வழங்கும் டிக் டிக் நிமிடங்கள் அடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் பெரும்பாலானவர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |