52 வயதிலும் இளமையாக குஷ்பு! முகம் ஜொலிஜொலிக்க இதுதான் சீக்ரெட்
நடிகை குஷ்பு தன் தலைமுடிக்கும் சருமத்திற்கும் வாழைப்பழ பேஸ்பேக்கைப் பயன்படுத்தி பயன்பெற்ற அனுபவத்தை நம்முடன் பகிர்ந்திருக்கிறார்.
நடிகை குஷ்பு
90களில் தமிழ் சினிமாவில் தன் ஆட்சியை கொடி கட்டி பறக்க விட்டவர் தான் குஷ்பு.
இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் இன்னும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகின்றது. தனது அம்சமான முகத்தால் அனைவரையும் கவர்ந்தவர் தான் இவர்.
மேலும் இவருக்காக கோயில் கட்டும் அளவிற்கு இவருக்கு ஒரு ரசிகர் பட்டாளம் இருந்தது. இவர் மூன்று தலைமுறையாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
நடிப்பில் மட்டும் அல்ல, தொழில் முனைவர், தயாரிப்பாளர், சின்னத்திரை நடிகை, நிகழ்ச்சி தொகுப்பாளர், நடுவர் என பன்முகத் திறமைகளைக் கொண்ட குஷ்பு அரசியலையும் விட்டு வைக்காமல் அந்தப் பக்கமும் சென்று இருக்கிறார்.
வாழைப்பழ பேஸ் பேக்
அன்றிலிருந்து இன்று வரைக்கும் எப்போதும் அழகாக இருக்கும் குஷ்பு தான் அழகாக இருப்பதற்கான காரணத்தைக் கூறியிருக்கிறார்.
அதில் வீட்டு வைத்தியம் தான் எப்போதும் சிறந்தது எனவும் வாழைப்பழம் உங்கள் கூந்தலுக்கும் சருமத்திற்கும் சிறந்தது என்று சொல்லி இருக்கிறார்.
வாழைப்பழத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் ஏ, ஈ மற்றும் சி, தாதுக்கள் மற்றும் இயற்கை எண்ணெய்கள் நிறைந்துள்ளது இது உங்கள் முடியை நன்கு வளர்ச்சியடைய வைக்கிறது.
மேலும், வாழைப்பழத்திலுள்ள சிலிக்கா, உடலில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதனால், தோலில் சுருக்கங்கள் உண்டாகாமல் பாதுகாக்கிறது.
பழுத்த வாழைப்பழத்தை தனியாகவோ அல்லது காய்ச்சிய பால், தேன் கொண்டு நன்றாக மசித்து முகத்திற்கு பேஸ் பேக்காக பயன்படுத்தும் போது வறண்ட சருமம், முகப்பரு தொல்லை, முகச் சுருக்கங்கள் இல்லாமல் போகிறது.
கூந்தலுக்கு நன்றாக பழுத்த வாழைப்பழத்தை மசித்து பாதாம் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்து கூந்தலுக்கு அப்ளே செய்து சிறிது நேரம் கழித்து ஷாம்பூ போட்டு கழுவினால் கூந்தல் மிருதுவாகவும் பளப்பாகவும் நன்கு அடர்த்தியாகவும் வளரும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |