விபத்தில் சிக்கினாரா நடிகை குஷ்பு? காலில் கட்டுடன் வெளியிட்ட புகைப்படம்
பிரபல நடிகை குஷ்பு தனது காலில் கட்டு போட்டு வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நடிகை குஷ்பு
90-களில் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்த நடிகை குஷ்பு பல முன்னணி பிரபலங்களுடன் ஜோடியாக நடித்தார். மேலும் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார்.
இயக்குனர் சுந்தர்சியை திருமணம் செய்து கொண்ட இவருக்கு, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். குஷ்புவின் இரண்டாவது மகள் அனந்திதாவின் 20வது பிறந்த நாள் சில தினங்களுக்கு முன்பு கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
திருமணத்திற்கு பின்னர், குணச்சித்திர வேடங்களை தேர்வு செய்து நடித்து வரும் இவர், சின்னத்திரையிலும் நடித்து அசத்திவருகின்றார்.
காலில் கட்டுடன் அதிர்ச்சி புகைப்படம்
சினிமா மட்டுமின்றி அரசியலிலும் குதித்த இவர், எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருந்து வந்த நிலையில், தற்போது காலில் கட்டுடன் இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் போட்டுள்ள பதிவில், உங்கள் அன்றாட வழக்கத்தை சீர்குலைத்து, ஒரு விசித்திரமான விபத்து, உங்களை வலியில் ஆழ்த்தும் போது, ஒருவர் என்ன செய்வார்? மற்றவர்களைப் பற்றி எனக்கு தெரியாது, ஆனால் எனது பயணம் நிற்காமல் தொடரும், சாதிக்கும் வரை நிறுத்தமாட்டேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் பல இடங்களுக்கு செல்ல வேண்டும் என்பதால், முழங்கால் வலியுடன் அதற்கான வலி நிவாரண மருந்தினை எடுத்துக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
குஷ்பு வெளியிட்ட புகைப்படத்தினை அவதானித்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.