குஷ்பு கையில் குழந்தையாக இருந்தவர் இந்த நடிகையா? 30 ஆண்டுகளுக்கு பின்பு வெளியான சுவாரசியம்
நடிகை குஷ்பு நடித்த கிழக்கு கரை திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக இருக்கும் நடிகை யார் என்பது 30 ஆண்டுகளுக்கு பின்பு தற்போது ரசிகர்களுக்கு தெரியவந்துள்ளது.
தமிழ் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்தவர் தான் நடிகை குஷ்பு. கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்த இவர் திரைப்பட இயக்குனர் சுந்தர் சி.யை திருமணம் செய்தார்.
தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருவதுடன், ரிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும், நடுவராகவும் பணியாற்றி வருகிறார்.
தன் கணவர் சுந்தர். சி கதாநாயகனாக நடிக்கும் படங்களை “அவ்னி சினிமாக்ஸ்” என்ற படத் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்தும் வருகிறார்.
குஷ்பு இன்று வரை பல படங்கள் நடித்து இருந்ததாலும் மக்கள் மனதில் என்று வரையும் நீங்காத இடம் பிடித்த படம் என்னவென்று கேட்டல் ரசிகர்கள் உடனே சொல்லுவது சின்னதம்பி.
இதைத் தொடர்ந்து 1991ம் ஆண்டில் வெளிவந்து வெற்றிப்படமான கீழக்கு கரை என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைபடத்தில் கில்லி திரைப்படத்தில் விஜய்யின் தங்கையாக வரும் ஜெனிபர் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
தற்போது 30 ஆண்டுகள் ஆன நிலையில் இதனை ஜெனிபர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.