கடக ராசிக்கு நகரும் கேது: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்!
ஜோதிட சாஸ்திரத்தின்படி, நவகிரகங்களின் நிலையானது 12 ராசிகளின் வாழ்க்கையிலும் நேரடியாக ஆதிக்கம் செலுத்தும் என்று நம்பப்படுகின்றது.
அந்தவகையில், கேது எதிர்மறையான பலன்களைத் தரும் நிழல் கிரகமாகக் அறியப்படுகின்றார். டிசம்பர் 5-ஆம் தேதி கேது கடக ராசிக்கு பெயர்ச்சியாகவுள்ளார்.

கடக ராசி சந்திரனால் ஆளப்படுவதால், இந்தப் பெயர்ச்சி முக்கியத்துவம் பெறுகிறது. இதனால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படலாம் என்று நம்பப்படுகிறது.
ஜோதிடக் கணிப்புகளின்படி, சில ராசிக்காரர்கள் தாங்கள் சந்தித்து வந்த பிரச்சினைகளிலிருந்து விடுபட்டு நிம்மதி அடையலாம்.
அதேவேளை, சிலருக்குத் தனிப்பட்ட வாழ்க்கையிலும் தொழிலிலும் சவால்களும் பின்னடைவுகளும் ஏற்படலாம். இந்தப் பெயர்ச்சியால் உச்சகட்ட பாதிக்கப்பை சந்திக்க கூடிய ராசிகள் யார் யார் என இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு கேதுவின் ராசி மாற்றம் சவால்கள் நிறைந்ததாக இருக்கும். சக ஊழியர்களால் நெருக்கடிகள் ஏற்படலாம்.
புதிய பொறுப்புகளால் பணிச்சுமையும் மன அழுத்தமும் அதிகரித்து, ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். எதிர்பாராத செலவுகள் சேமிப்பைக் குறைத்து, கடன் வாங்கும் நிலையை ஏற்படுத்தலாம்.
தனிப்பட்ட மற்றும் தொழில் உறவுகளில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பொறுமை, சரியான திட்டமிடல் மற்றும் ஒழுக்கத்துடன் செயல்படுவது அவசியம்.
மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு கேதுவின் ராசி மாற்றம் சாதகமாக இருக்காது. தனிப்பட்ட வாழ்க்கையில் சிக்கல்களும், பேச்சால் வாக்குவாதங்களும் ஏற்படலாம்.
எனவே, வார்த்தைகளில் கவனம் தேவை. தைரியம் அதிகரித்தாலும், காரியங்களை முடிக்கக் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.
தொழிலில் முன்னேற்ற வாய்ப்புகள் குறையலாம்; தேவையற்ற அலைச்சலும் ஏற்படலாம். வியாபாரத்தில் மந்தநிலை நிலவ அதிக வாய்ப்பு காணப்படுகின்றது.
துலாம்

துலாம் ராசிக்காரர்கள் கேதுவின் ராசி மாற்றத்தால் சில சவால்களைச் சந்திக்கலாம். முதலீடுகள் மற்றும் பணம் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
தனிப்பட்ட வாழ்க்கையில் மனக்கசப்பும், துணையுடன் கருத்து வேறுபாடுகளும் ஏற்படலாம். தொழிலில் மன அழுத்தம் அதிகரிப்பதுடன், வணிகக் கூட்டாளியுடனும் பிரச்சினைகள் உருவாகலாம்.
துணையின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது அவசியம். மருத்துவச் செலவுகளுக்காக அதிக பணம் செலவிட வேண்டிய சூழல் ஏற்படும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |