செவ்வாய் பெயர்ச்சியால் ஜாக்பாட் அடிக்கப்போகும் டாப் 3 ராசிகள்! உங்க ராசியும் இதுல இருக்கா?
வேத ஜோதிடத்தில் கிரகங்களின் தளபதியாகக் கருதப்படுபவர் செவ்வாய். தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாக விளங்கும் இவர், ஒரு ராசியில் சுமார் 45 நாட்கள் வரை இருப்பார்.
மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியான செவ்வாய், தற்போது கடக ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில், நவம்பர் 12ஆம் தேதி கடக ராசியிலிருந்து வெளியேறி சிம்ம ராசிக்குள் நுழைகிறார்.

சிம்ம ராசியின் அதிபதி சூரியன். சூரியனும் செவ்வாயும் நட்பு கிரகங்கள் என்பதால், இந்தப் பெயர்ச்சி சிறப்பானதாகக் கருதப்படுகிறது.
இதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் தொழில் மற்றும் நிதி ரீதியாகச் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர்.
அப்படி செவ்வாய் பெயர்ச்சியால் பெருமளவில் அதிர்ஷ்ட பலன்களை பெறப்போகும் ராசிகள் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
கடகம்

கடக ராசியின் 2ஆம் வீட்டிற்கு செவ்வாய் செல்வதால் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பல வழிகளில் நற்செய்திகள் கிடைப்பதுடன், நீண்டகாலமாக வராமல் இருந்த பணமும் கைக்கு வந்து சேரும்.
இதனால் நிதிப் பிரச்சினைகள் குறையும். நல்ல சம்பளத்துடன் புதிய வேலைவாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிப்பதுடன், கடின உழைப்புக்கேற்ற பலனும் நிதி முன்னேற்றமும் கிடைக்கும்.
குடும்பத்தினரின் ஆதரவுடன் தன்னம்பிக்கையாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.குறிப்பாக புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் கூடி வரும்.
சிம்மம்

சிம்ம ராசியின் முதல் வீட்டிற்கு சூரியன் செல்வதால் திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. வணிகர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் மூலம் லாபம் அதிகரிப்பதுடன், தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்புகளும் கிடைக்கும்.
பரம்பரைச் சொத்துகள் மூலம் நிதி ஆதாயம் ஏற்படலாம்.பணியிடத்தில் உங்கள் மதிப்பு உயரும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரித்து, மேற்கொள்ளும் செயல்களில் வெற்றி கிடைக்கும்.
குடும்பத்தில் புதிய பொறுப்பு கிடைத்தாலும், அதை நம்பிக்கையுடன் நிறைவேற்றுவீர்கள். குறிப்பாக நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
விருச்சிகம்

விருச்சிக ராசியின் 10ஆம் வீட்டிற்கு செவ்வாய் செல்வதால் நிலம், சொத்து தொடர்பான விஷயங்களில் நல்ல ஆதாயம் கிடைக்கும்.
நிதி நிலை மேம்படுவதுடன், அதிர்ஷ்டத்தின் ஆதரவால் மேற்கொள்ளும் காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். உங்களை அறிவு சார்ந்து மேம்படுத்திக்கொள்ளும் வாய்ப்புகளும் கிடைக்கும்.
இக்காலத்தில் எடுக்கும் முக்கிய முடிவுகள் எதிர்காலத்தில் நன்மைகளைத் தரும். பணியிடத்தில் செயல்திறனும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |