தக்காளி சேக்காம ஒரு குழம்பு வேண்டுமா? அப்போ கேரளா ஸ்டைலில் வாழைக்காய் குழம்பு செய்யுங்க
பொதுவாக தக்காளியின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கும். இதனால் குழம்பு வைக்கும் போது சில சமயங்களில் தக்காளியில்லாமல் இருக்கும்.
தட்டுபாடான காலங்களில் தக்காளியை சேர்க்காமல் எப்படி குழம்பு வைப்பது என குழப்பத்தில் இருப்பார்கள்.
இந்த மாதிரியான நேரங்களில் கேரளா ஸ்டைல் வாழைக்காய் குழம்பு செய்யலாம் இதற்கு தக்காளி தேவையில்லை.
இந்த குழம்பு சாப்பிடும் போது தக்காளி சேரக்கவில்லை என்ற ஒரு உணர்வு இருக்காது. சுவையும் அட்டகாசமாக இருக்கும்.
அந்த வகையில் தக்காளி பழம் இல்லாமல் வாழைக்காய் குழம்பு எவ்வாறு செய்வது என தெரிந்து கொள்வோம்.
குழம்பிற்கு தேவையான பொருட்கள்
* வாழைக்காய் - 2 (தோலுரித்து துண்டுகளாக்கப்பட்டது)
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* தயிர் - 1 கப்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
அரைப்பதற்கு தேவையான பொருட்கள்
* பச்சை மிளகாய் - 2
* சீரகம் - 1 டீஸ்பூன்
* துருவிய தேங்காய் - 1 கப்
தாளிப்பதற்கு தேவையான பொருட்கள்
* தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - சிறிது
குழம்பு எப்படி செய்யணும் தெரியுமா?
முதலில் குழம்பிற்கு தேவையான வாழைக்காயை எடுத்து மஞ்சள் தூள், உப்பு சேர்த்து குக்கரில் மூடி, 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும் .
இறக்கிய பின்னர் தயிரை ஒரு பவுலில் போட்டு மிளகாய்த்தூள் கலந்து அதனை தனியாக வைத்து கொள்ளவும்.
இதனை தொடர்ந்து அரைக்க தேவையான பொருட்களை போட்டு பச்சை மிளகாய், சீரகம், துருவிய தேங்காயைப் போட்டு, சிறிது நீரை சேர்த்து மிக்ஸி சாரிலி போட்டு மைப் போல் அரைத்து கொள்ளவும்.
தேங்காய் விழுது, வாழைக்காய், தயிர் ஆகியவற்றை சேர்த்து அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.
பச்சை வாசனை சென்றவுடன் வாணலியை அடுப்பில் வைத்து கடுகு, சீரகம், வெந்தயம், வரமிளகாய், கறிவேப்பிலை ஆகிய பொருட்களை போட்டு தாளித்து இறக்கினால் சுவையான வாழைக்காய் குழம்பு தயார்!