ஆட்டோ வடிவிலான புதிய ஆடம்பர பை... இதன் விலைக்கு 17 ஆட்டோவே வாங்கிடலாம்!
பிரபல ஃபேஷன் பிராண்டான LOUIS VUITTON நிறுவனம் ஆட்டோ வடிவிலான புதிய ஆடம்பர பையை அறிமுகம் செய்துள்ளது. இது குறித்த தகவல்கள் தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
மக்களின் ஆடம்பர மோகமானது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சில பிரபல நிறுவனங்கள் அதற்கு தீணி போடும் வகையில் தங்களின் புதிய படைகளை அறிமுகம் செய்து வருகின்றது.
அந்த வகையில் பிரபல ஃபேஷன் பிராண்டான LOUIS VUITTON நிறுவனம்அறிமுகம் செய்துள்ள ஆட்டோ வடிவிலான ஆடம்பர பையின் விலை ரூ.35 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
குறித்த பை தொடர்பான விடயங்கள் இணையத்தில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளதுடன், இந்த ஒரு பையை வாங்குவதற்கு உண்மையான ஆட்டோக்களில் 17வாங்கி விடலாம் என இந்த பையின் விலை குறித்து இணையத்தில் நெட்டிசன்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
