இனி பிரியாணி ஸ்டைலில் தக்காளி சாதம் செய்யலாம்
உணவுகளின் ருசிக்காக சேர்க்கப்படுவது தக்காளி. தக்காளிக்கு என்றுமே ஒரு தனி சுவை உண்டு.
சரி இனி தக்காளி சாதம் எவ்வாறு செய்யலாம் எனப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
அரிசி - 1 கப்
தக்காளி - 4
வெங்காயம் - 2
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
வெள்ளைப் பூண்டு - 4 பல்
சீரகம் - 1/2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 4
ஏலக்காய் - 2
கிராம்பு - 2
முந்திரி - 20
பட்டை - 2 துண்டு
கறிவேப்பிலை - சிறிதளவு
மல்லித்தழை - சிறிதளவு
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
image - awesome cuisine
செய்முறை
முதலில் வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பின்னர் அரிசியை உதிரியாக வடித்துக் கொள்ளவும்.
தக்காளி, வெள்ளைப் பூண்டு, பச்சை மிளகாய் என்பவற்றை தனித்தனியாக அரைத்துக் கொள்ளவும்.
அதன் பின்னர் ஒரு கடாயை எடுத்து எண்ணெய் விட்டு சூடானதும் அதில் ஏலக்காய், கிராம்பு, முந்திரி, பட்டை, சீரகம் என்பவற்றைப் போட்டு தாளித்து, அதன் பின்னர் வெள்ளைப் பூண்டு மற்றும் பச்சை மிளகாய் விழுதை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
பின்பு பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் தக்காளி சாற்றை ஊற்றி, அதில் மஞ்சள் தூள். உப்பு, கறிவேப்பிலை சேர்த்து எண்ணெய் பிரியும்வரை கொதிக்கவிடவும்.
எண்ணெய் பிரிந்து தனியாக வந்ததும் அதில் வடித்த சாதத்தை போட்டுக் கிளறி, இறுதியாக கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.
image - desert food feed