Today lunch curry: கேரளா ஸ்டைல் மீன்குழம்பு சாப்பிட்டு இருக்கீங்களா?
கேரளாவில் மீன் குழம்பு என்றால் சொல்லவே தேவை இல்லை. சுவை மிகவும் பிரமாதமாக இருக்கும். இங்கு மத்தி மீன் தான் அதிக பிரபலமான மீனாக பார்க்கப்படுகிறது.
மீன் குழம்பை பொதுவாக நெய் சோறு, புட்டு, கடலைக் கறி, செம்மீன், மீன் பொளிச்சது, அடைப் பிரதமன், மலபார் மீன் குழம்பு, மீன் கறி, அப்பம் போன்ற எல்லா உணவுகளுக்கும் வைத்து உண்ணலாம்.
அதிலும் கேரளா மீன் குழம்பு எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- அயிலை மீன் - 1 கிலோ
- சின்ன வெங்காயம் - 8
- தக்காளி - 1
- இஞ்சி - 1
- பூண்டு - 7
- கறிவேப்பிலை- சிறிதளவு
- பச்சை மிளகாய் - 3
- மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
- புளி - நெல்லிக்காய் அளவு
- தனியா தூள் - 1.1/2 டீஸ்பூன்
- சிவப்பு மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
- கடுகு - 1 டீஸ்பூன்
- வெந்தயம் -1 டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அது சூடாகியதும் தேங்காய் எண்ணெய் ஊற்றி அது சூடாகியதும் சின்ன வெங்காயத்தை சேர்த்து தாளித்து எடுத்து கொள்ள வேண்டும். அதே பாத்திரத்தில் தக்காளியை கொஞ்சம் தாழித்து எடுத்து கொள்ள வேண்டும்.
இது இரண்டையும் ஒரு மிக்சியில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதன் பிறகு அடுப்பில் மண் சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, வெந்தயம், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை போன்றவை போட்டு தாளிக்க வேண்டும்.
இதன் பின்னர் பச்சை மிளகாய், மஞ்சள் தூள், தனியா தூள், சிவப்பு மிளகாய் சேர்த்து எண்ணெயில் நன்கு வதக்கவும். இதனுடன் அரைத்த தக்காளி வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.
இதனுடன் புளி தண்ணீர் ஊற்றி உங்களுக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்க்க வேண்டும். இதன் பின்னர் உப்பு சேர்த்து 7 நிமிடங்கள் கொதிக்க விட்டு அதன் பின் மீனை சேர்க்க வேண்டும். மீன் வேகி வந்ததும் கொத்தமல்லி போட்டு இறக்கினால் சுவையான கேரளா மீன் கறி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |