சில வேளைகளில் சமைக்கும் போது அரிசி வேகாமல் போவதற்கு இது தான் காரணமா? இனி செய்யாதீங்க!
பொதுவாக இந்தியா, இலங்கை போன்று தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளில் மக்கள் பிரதான உணவாக அரிசியை தான் எடுத்து கொள்வார்கள்.
மாவுச்சத்து நிறைந்த தானியம் இல்லாமல் எந்த உணவும் முழுமையடையாது என கூறுவார்கள்.
இதன்படி, அரிசியை சரியாக சமைப்பது என்பது ஒரு கலையாக பாரக்கப்படுகின்றது.
இந்திய உணவுகளில் பிரதானமாக அரிசி அதாவது சாதம் தான் இருக்கும்.
சாதம் சரியாக வேகாவிட்டால் குழம்பு எவ்வளவு சுவையாக இருந்தும் பலன் இல்லாமல் போய் விடும்.
அந்த வகையில், வெள்ளை அரிசியை சரியான முறையில் எப்படி சமைக்க வேண்டும்? என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
வெள்ளை அரிசியை சமைப்பது எப்படி?
1. தானியங்களை சமைக்கும் முன்னர் அதனை சரியான முறையில் கழுவ வேண்டும். கழுவாவிட்டால் அதிலிருக்கும் அழுக்குகள் உணவு வழியாக வயிற்றிற்குள் சென்று வேறு விதமான பிரச்சினைகளை ஏற்படுத்தும். அரிசியை சரியாக கழுவி சமைக்கும் போது மிகவும் ஒட்டும் தன்மையை ஏற்படுத்தும். இதைத் தவிர்க்க வேண்டுமென்றால் குளிர்ந்த நீரில் குறைந்தது 3-4 முறை கழுவ வேண்டும்.
2. அரிசியை நன்றாக கழுவிய பின்னர் வேக வைப்பதற்கு முன்னர் நீர்-அரிசி விகிதத்தை சரியாக வைக்கவும். அதிகமான தண்ணீர் சேர்த்து விட்டால் சாதம் குலைந்து விடும். ஆகவே தண்ணீர் அளவில் அதிகப்படியான கவனம் செலுத்த வேண்டும்.
3. சாதம் சமைக்கும் போது வெள்ளை அரிசியை விட பழுப்பு நிறத்தில் இருக்கும் அரிசி சமைப்பதற்கு 50 நிமிடங்கள் வரை தேவைப்படும். வெள்ளை அரிசியை விட ¼ முதல் ½ வரை தண்ணீர் அதிகம் பயன்படுத்த வேண்டும். அதே சமயம் வெள்ளை அரிசி சமைக்க 15 நிமிடங்கள் ஆகலாம்.
4. அரிசி சமைக்கும் போது, அதிகமாக வெப்பமேற்ற வேண்டும். அளவான வெப்பநிலையில் வைத்து சமைத்தல் அவசியம். அதிக தீயில் அரிசியை சமைக்கும் போது தண்ணீர் ஆவியாகலாம். சாதத்திற்கு தண்ணீர் போதவில்லையென்றால் இடையில் சேர்க்கலாம்.
5. சாதம் வெந்ததும் உடனே ஒரு பாத்திரத்தில் எடுத்து விடக்கூடாது. சாதம் வெந்து கீழே இறக்கியவுடன் 5-10 நிமிடங்கள் ஓய்வெடுக்க வேண்டும். மீதமுள்ள நீராவி அரிசியை மெதுவாக கெட்டியாகும். இது சாதத்திற்கு பஞ்சுபோன்ற தன்மையை கொடுக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |