கொட்டும் மழையில் 4 மாத குழந்தையின் சடலத்துடன் தந்தை! கண்கலங்க வைக்கும் புகைப்படம்
இறந்த தனத நான்கு மாத குழந்தையை கொட்டும் மழையில் 4 கி.மீ தந்தை ஒருவர் தூக்கிச் சென்றுள்ள சம்பவம் கண்கலங்க வைத்துள்ளது.
கேரள தந்தையின் சோகம்
கேரளாவின் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் அய்யப்பன். அவரது 4 மாத குழந்தைக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அய்யப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் அழுது புழம்பியுள்ளனர். கொட்டும் மழையில் வீட்டிற்கு குழந்தையை எப்படி கொண்டு செல்வது என்று தெரியாமல் நின்றுள்ளார்.

கொட்டும் மழையில் குழந்தையின் சடலம்
பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் அய்யப்பன், பழங்குடி இனத்தைச் சேர்ந்த இவரது குடியிருப்பு வனப்பகுதிக்குள் அமைந்துள்ளது;
இதனால் போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் தனது வீட்டிற்கு 4 கிலோ மீட்டர் தூரம் குழந்தையோடு நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதை கண்டு வருந்தினார்.
இவரது வீடு வாகனம் செல்லமுடியாத குறுகிய மலைப்பாதை என்பதால் தனது குழந்தையை நெஞ்சோடு அணைத்த படி அய்யப்பன் நடந்து சென்றுள்ளார்.
கேரளாவில் தென் மேற்கு பருவமழை அதிகரித்துள்ளன் காரணமாக பலத்த மழை பெய்து வந்தது. இந்த மழைக்கு நடுவே அய்யப்பன் குழந்தையை கொண்டு சென்றதும், குழந்தையின் மேல் மழைத்துளி விழாமல் உடன் வந்தவர் குடைபிடித்தப்படி வரும் சம்பவம் அந்த பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.