கடைசியா என்னிடம் திருமணம் செய்ய போறேன்னு மட்டும் தான் சொன்னா: சில்க் ஸ்மிதா பற்றி மனம் திறந்த பிரபலம்
80களில் பேரழகியாக வர்ணிக்கப்பட்ட சில்க் ஸ்மிதா பற்றி நடன கலைஞனர் புலியூர் சரோஜா சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.
சில்க் ஸ்மிதா
உடல் மறைந்தாலும் நினைவுகளால் வாழ்பவர்கள் சிலரே அந்த வரிசையில் ரசிகர்கள் மத்தியில் சில்க் ஸ்மிதாவிற்கு தனியிடமே உண்டு.
ஆந்திரமாநிலம் ஏலூரு என்ற இடத்தில் பிறந்தவர் தான் சில்க் ஸ்மிதா. இவரது இயற்பெயர் விஜயலட்சுமி. இவர் பிறந்தது ஆந்திரப் பிரதேச மாநிலம் என்றாலும் பூர்வீகம் கரூர் ஆகும். வறுமை காரணமாக பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு 1970களில் ஒரு ஒப்பனைக் கலைஞராக திரைத்துறை வாழ்க்கையைத் தொடங்கினார்.
தமிழ் நடிகரும் இயக்குனருமான வினுச்சக்ரவர்த்தியின் மூலம் வண்டிச்சக்கரம் என்கிற ஒரு தமிழ் திரைப்படத்தில் சில்க் என்கிற ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.
அதன் பிறகு தான் இவருக்கு சில்க் ஸ்மிதா என்ற பெயர் வந்தது. பல திரைப்படங்களில் நடித்த இவர், பல திரைப்படங்களில் கவர்ச்சி நடனமும் ஆடியுள்ளார்.
இவ்வாறு கொடிக்கட்டி பறந்த வேளையில் தான் 1996ஆம் ஆண்டு செப்டெம்பர் 23 ஆம் திகதி அவருடைய அடுக்குமாடி குடியிருப்பில் பிணமாக மீட்கப்பட்டார்.
அவர் தற்கொலை செய்துக்கொண்டாரா இல்லை கொலை செய்யப்பட்டாரா என்பது தொடர்பில் இன்னும் முடிவில்லாமல் தொடர்ந்துக்கொண்டிருக்கிறது.
நடன கலைஞர் புலியூர் சரோஜா
சில்க் ஸ்மிதாவிற்கு மிகவும் நெருக்கமானவரும், வழிகாட்டியுமானவர் தான் நடன கலைஞர் புலியூர் சரோஜா. அவர் அண்மையில் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த வேளையில் சில்க் ஸ்மிதா பற்றி நிறைய விடயங்களை பகிர்ந்திருக்கிறார்.
அதில் அவர் தொடர்ந்து தெரிவித்ததாவது,
சூரக்கோட்டை சிங்கக்குட்டி என்ற படத்தில் நடிகர் பிரபுவுடன் சில்க் ஸ்மிதாவை நடனமாட வைத்தது மறக்க முடியாத அனுபவம்.
சகலகலாவல்லவன் படத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் ஒரு பாடலுக்கு ஆடினார் சில்க் ஸ்மிதா. நேத்து ராத்திரி அம்மா பாடலுக்கு சில்க் ஸ்மிதாவுக்கு உணர்ச்சிகளை வெளிக் கொண்டு வரத் தெரியவில்லை.
அம்மா என்பதை நன்றாக உணர்ச்சியுடன் முகபாவனையைக் கொண்டுவரத் தெரியவில்லை. இதனால் சில்க்கின் வயிற்றில் பிரேமில் தெரியாதவாறு கிள்ளினேன்.
சரியாக அம்மா என்ற வலியில் கற்றுவது போல் உணர்ச்சியை வெளிப்படுத்தினார்.
நெருக்கம்
சில்க்கின் கண்கள் இயற்கையாகவே அழகாக இருக்கும். அவரது உடலும் அழகுதான். உதடும் அழகும்தான். இத்தனை அழகை ஆண்டவன் அனைவருக்கும் கொடுக்க மாட்டார்.
மோகன்லாலுடன் ஒரு மலையாள படத்தில் ஒரு பாடலுக்கு ஆட வைத்தேன். அவள் குழந்தை மாதிரி தான் இருப்பாள்.
ஒரு முறை என்னிடம் நான் திருமணம் செய்து கொள்ள போகிறேன் என்று கூறினார் சில்க். நீங்க தான் கல்யாணத்திற்கு வந்து முன்னாடி நின்று நடத்தி வைக்க வேண்டும் என்று கேட்டார்.
எந்த நகைகளை போட்டுக் கொள்ள வேண்டும் என்று கூட கேட்டார். அப்போது சில்க்குக்கு கண்களில் கண்ணீர் வந்தது.
அப்போது சில நாள் கழித்துதான் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்ட செய்தி தெரியவந்தது.உடனே அவளை பார்க்க சென்றேன். அவளைப்பார்க்க கஷ்டமாக இருந்தது. அங்கேயும் ஏதோ செய்துவிட்டார்கள் போல, அவள் தற்கொலை செய்து கொள்ளக்கூடியவள் இல்லை.
நிச்சயமாக சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டிருக்க மாட்டார். அவள் இறந்து அடுத்த 10 நாள் என்னால் தூங்கக் கூட முடியவில்லை. சில்க் ஸ்மிதாவை யாரு என்ன செய்திருந்தாலும் நல்லவே இருக்க மாட்டாங்க என உருக்கமாக தெரிவித்துள்ளார்.