சின்னத்திரையை விட்டு விலகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்! காரணம் என்ன?
குடும்ப ஒற்றுமையையும் அண்ணன் தம்பிகளின் பாசப் பிணைப்பையும் பறைசாற்றும் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
இதில் நான்கு ஹீரோக்கள். நான்கு ஹீரோயின்கள். அதில் யதார்த்தமான நடிப்பு, சாதாரண தோற்றம் என்று கதிர் என்னும் கதாபாத்திரத்தின் மூலம் அனைவர் மனதிலும் இடம் பிடித்தவர் நடிகர் குமரன்.
இவரை 'சின்னத்திரையின் தளபதி' என்றும் அனைவரும் அன்பாக அழைப்பதுண்டு. இவர் 'ஜோடி நம்பர் 1' நிகழ்ச்சியில் பின்னணி நடனக் கலைஞராக பணியாற்றினார்.
அதன் பின்னர் 'உங்களில் யார் அடுத்த பிரபுதேவா' நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதற்கடுத்ததாக விக்ரம் பிரபு, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான 'இது என்ன மாயம்' திரைப்படம் மூலம் சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்தார்.
அண்மையில் இவர் நடித்த 'வதந்தி' வெப் சீரிஸ் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது அவர் நடிப்பில் 'மாய தோட்டா' எனும் வலைத்தொடர் வெளியாகியுள்ளது.
தற்போது அவர் நடித்துக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிந்ததும் சின்னத் திரைக்கு குட் பை சொல்லிவிட்டு சினிமா மற்றும் வலைத் தொடர்களில் முழு கவனம் செலுத்தவிருக்கிறார் என்று கூறப்படுகிறது.