ரோட்டுக்கடை ஸ்டைலில் கீரை பக்கோடா செய்வீங்களா? இந்த பொருள் சேர்த்தால் என்ன நடக்கும்?
பொதுவாக வீடுகளில் இருக்கும் குழந்தைகள் கீரை என்றால் சாப்பிடவே பயம் கொள்வார்கள்.
இதனால் இதனை வித்தியாசமான முறையில் ஸ்நாக்ஸ் செய்து கொடுக்கலாம்.
அந்த வகையில் ரோட்டுக்கடை ஸ்டைலில் கீரை பக்கோடா எவ்வாறு செய்யலாம் என தொடர்ந்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
ஏதாவது ஒரு கீரை - 1 கட்டு
கடலை மாவு - 2 கப்
அரிசி மாவு - 4 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு - தேவைக்கேற்ப
பச்சை மிளகாய் - 4
இஞ்சி - சிறு துண்டு
சீரகம் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
தயாரிப்பு முறை
முதலில் ஸ்நாக்ஸிற்கு தேவையான கீரையை எடுத்து சுத்தம் செய்து நறுக்கி தனியாக வைத்து கொள்ளவும்.
பின்னர் முந்திரிப்பருப்பு, ப.மிளகாயை ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அத்துடன் இஞ்சியையும் தனியாக சுத்தம் செய்து வைக்கவும்.
இதனை தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு ஆகியவற்றை சேர்த்து அதனுடன் நறுக்கி தனியாக வைத்திருக்கும் காய்கறிகளை சேர்த்து கலந்து கொள்ளவும்.
கலந்து கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக கீரையை சேர்த்து சரியாக பக்கோடா பதத்திற்கு கலந்து வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் பக்கோடாவை போட்டு பொன்னிறமாகும் வரை வைத்திருந்து இறக்கினால் சுவையான பக்கோடா தயார்!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |