கவின் திருமணத்தில் முக்கிய சீக்ரெட்டை பரப்பி விட்ட நண்பர்- பலரின் கவனத்தை ஈர்த்த பதிவு!
கவின் திருமணம் தொடர்பில் முக்கிய இரகசியத்தை அவரின் நண்பர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
லாஸ்லியா - கவின் காதல் விவகாரம்
சின்னத்திரை பிரபலமாக இருந்த கவின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார்.
இதனை தொடர்ந்து கோலிவுட்டிலும் கால்பதித்து சிறந்த படங்களில் நடித்துள்ளார். பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது இலங்கை பெண் லாஸ்லியாவின் மீது காதல் கொண்டார்.
இவர்களின் காதல் வெளியில் வந்தவுடன் பிரிவை சந்தித்தது. தற்போது இருவரும் தங்கள் வேலைகளில் பிஸியாக இருக்கிறார்கள்.
இந்த நிலையில் கவினுக்கு திருமணம் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நண்பர் பகிர்ந்த சீக்ரெட்
லாஸ்லியாவின் நெருங்கிய தோழி மோனிகாவை தான் கவின் மணக்க போகிறார் என்பதும் தெரியவந்துள்ளது.
தனியார் பள்ளியில் பணியாற்றி வரும் மோனிகாவுடன் ஒகஸ்ட் மாதம் 20ம் திகதி கவினுக்கு திருமணம் நடைபெறவுள்ளது.
Wedding bells for @Kavin_m_0431!
— Yuvraaj (@proyuvraaj) August 1, 2023
Young Tamil star Kavin, whose latest film #Dada emerged a blockbuster earlier this year, is to tie the knot with his longtime girlfriend #Monica on August 20. The wedding is to take place with the blessings of both families.#Kavin pic.twitter.com/kKsLUQ8jME
இதனை கவினுக்கு நெருக்கமான நண்பர் ஒருவர் தனது சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த தகவலை பார்த்த கவினின் பெண் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பாரிய எதிர்ப்பை காட்டி வருகிறார்கள். இன்னும் சிலர் லாஸ்லியாவை வெறுப்பேற்றியும் வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |