கணவர் முன்பு ரகசியத்தை உடைத்த தாமரை.. கமலிடம் சிக்குவாரா? பேரதிர்ச்சியில் பார்வையாளர்கள்
பிக் பாஸ் வீட்டில் நாங்களா சண்டை போடுறதில்லை மாமா.. அவங்க தான் சண்டை போட சொல்றாங்க என தாமரை செல்வி பிக் பாஸ் ரகசியங்களை அம்பலப்படுத்தியுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியும் மற்ற ரியாலிட்டி ஷோக்களை போலவே ஒரு ஸ்க்ரிப்டட் ஷோ தான் என்கிற கருத்து மக்கள் மத்தியில் இருந்தாலும், அந்த நிகழ்ச்சியின் மீது இன்னமும் பலருக்கு இருக்கும் நம்பிக்கை தான் அந்த நிகழ்ச்சியை அடுத்தடுத்த சீசன்களுக்கு எடுத்து செல்கிறது.
இந்நிலையில், தாமரை செல்வி ஓப்பனாக உடைத்து பேசியதை பிக் பாஸ் எடிட்டர் கவனிக்காமல் எடிட் பண்ண மறந்து விட்டாரோ என நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
தாமரையின் கணவர் பேசும் போது எல்லாரும் நல்லவர்கள் தான் ஏன் திடீர்னு சண்டை போடுறீங்க.. சில நேரத்தில் எதையும் புரிந்து கொள்ளாமல் நீ கத்துவது பிடிக்கவில்லை என தெரிவித்தார்.
உடனே தாமரை நாங்க ஜாலியா தான் இருக்கோம் மாமா திடீர்னு அவங்க தான் சண்டை போட சொல்றாங்க என சைக்கிள் கேப்பில் தாமரை ஒட்டுமொத்த பிக் பாஸ் ரகசியத்தையும் உடைத்துவிட்டார். இது சமூக ஊடகங்களில் தற்போது விவாதமாகியுள்ளது.
இது குறித்து இன்றைய நிகழ்ச்சியில் கமல் எதுவும் கேள்வி எழுப்புவாரா என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.