லாஸ்லியாவின் தோழியைத் தான் கவின் திருமணம் செய்யப் போகிறாரா? வைரலாகும் புகைப்படம்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமாகி சினிமாவில் வளர்ந்து வரும் கவின் தற்போது திருமணம் செய்துக் கொள்ள போகும் பெண் முன்னாள் காதலியின் தோழி என சில புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ் கவின்
பிக்பாஸ் கவினும் விஜய் டிவியின் வாரிசு தான். இவர் இந்த தொலைக்காட்சியில் கனா காணும் காலங்கள் என்ற சீரியல் மூலம் அறிமுகமாகி அதன் பின் படிப்படியாக அடுத்தடுத்து சில சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார்.
சீரியலில் பிரபலமாகியப் பின் வெள்ளித்திரையில் ஜொலிக்க வேண்டும் என்று சில படங்களில் சின்ன சின்ன ரோலில் நடித்து வந்தார். பின்னர் தான் நட்புன்னா என்னானு தெரியுமா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
ஆனால் அந்தப் படம் எதிர்ப்பார்த்த அளவில் வெற்றிப் பெறாத காரணத்தால் பிக்பாஸ் வீட்டில் நுழைந்தார்.
முன்னாள் காதலியின் தோழியை காதலிக்கும் கவின்
பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த வேளையில், இலங்கையைச் சேர்ந்த லாஸ்லியாவை காதலித்து வந்தார்கள் ஆனால் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியில் வந்ததும் இருவரும் அவரவர்களின் வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்.
இந்நிலையில், கவினுக்கு ஆகஸ்ட் 20ஆம் திகதி தான் காதலித்து வந்த பெண்ணை திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் கவின் திருமணம் செய்துக் கொள்ளப்போகும் பெண் முன்னாள் காதலியான லாஸ்லியாவின் தோழி என சில படங்கள் வைரலாகி வருகின்றது.
இதனைப் பார்த்த நெட்டிசன்கள் மோனிகாவின் காதலால் தான் லாஸ்லியா-கவின் காதலில் பிரிவு வந்தது என்று கூறிவருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |