40 வயதிலும் இளமை தோற்றம்! பொலிவுட் நடிகை சொல்லும் சீக்ரட்
பொலிவுட் சினிமாவில் புகழ்பெற்று இருக்கும் கத்ரீனா கைஃப் தன்னுடைய பிட்னஸ் மற்றும் அழகு ரகசியத்தை சொல்லியிருக்கிறார்.
கத்ரீனா கைஃப்
பொலிவுட் சினிமாவில் கனவுக்கன்னியாக இருந்து வரும் கத்ரீனா கைஃப் ரேஸ், பாடிகார்ட், அக்னிபாத் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.
இவர் ஹிந்தி மொழிகளில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் என பிற மொழிகளிலும் நடித்திருக்கிறார். மேலும், இவர் முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்திருக்கிறார்.
இவர் பொலிவுட் நடிகரான விக்கி கவுசல் என்பரையும் திருமணம் செய்துக் கொண்டார்.
பிட்னஸ் ரகசியம்
வாரத்தில் 7 நாட்களும் 1-3 மணிநேரம் உடற்பயிற்சி செய்வாராம். இவருக்கான உடற்பயிற்சி அட்டவணையை இவரே தயார் செய்து சில பயிற்சிகளை செய்வாராம்.
உடலை வலுப்படுத்தும் எடைப்பயிற்சிகள், யோகா மற்றும் கார்டியோ பயிற்சிகளை தினமும் செய்வாராம்.
உடலின் ஊட்டச்சத்துக்களை அதிகப்படுத்த ஊற வைத்த காய்ந்த 8 திராட்சைகளோடு பெருஞ்சீரகத்தை காலையில் சாப்பிட வேண்டும்.
வெள்ளரிக்காய் ஜுஸ் மற்றும் வெண்பூசணி, சூடான சூப்களை என்பவற்றை பருகுவாராம்.
சக்கரைக்கு பதிலாக பேரிட்சை பழத்தை தான் அதிகம் சாப்பிடுவாராம்.
இவர் உணவு உண்பதில் எந்த விதிகளையும் பின்பற்றுவதில்லையாம். முக்கியமாக டயட்டை பின்பற்றுவதில்லை.
இரவு 7 மணிக்குப் பிறகு குறைவான உணவுகளைத் தான் உண்பாராம்.
காய்கறிகள், அரிசி, புரதம் நிறைந்த உணவுகள், உருளைக் கிழங்கு, சக்கரை வள்ளி கிழங்கு போன்ற உணவுகளை சேர்த்துக் கொள்வாராம்.
கோதுமை, பால் மற்றும் குளுட்டன் உணவுகளை தவிர்த்து விடுவாராம்.
காலையில் எழுந்ததும் நான்கு கிளாஸ் வெதுவெதுப்பான தண்ணீரை குடிப்பாராம்.
பின்னர் இரண்டு மணி நேரங்களுக்கு ஒருமுறை வேக வைத்த காய்கறிகளையும் பழங்களையும் சாப்பிடுவாராம்.
தியானம் செய்வது மனதிற்கும் உடலிற்கும் மிகவும் நல்லதாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |