பசியோடு இருப்பது போன்று கனவு வருகின்றதா? அப்போ அது உங்களுக்கு எச்சரிக்கையாம்
தூக்கத்தில் நாம் காணும் கனவுகள் கூட நமக்கு பல அறிகுறிகளை உணர்த்துவதாக அமைகின்றது. மேலும் நாம் காணும் கனவிற்கு அர்த்தம் என்னவாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள நாம் அதிகமாகவே விரும்புவோம்.
நீங்கள் உணவை உண்பதை கனவில் கண்டால் அது மங்களகரமான கனவாகும். அதாவது வரும் காலத்தில் உங்கள் உடலில் இருக்கக்கூடிய நோய் குணமாகும் என்பதை தெரியப்படுத்துகிறது.
கனவில் உணவு சமைப்பது போன்று கண்டால் நல்ல செய்தி வந்து சேரும்.
கனவில் ரொட்டி சாப்பிடுவதைப் போல கண்டால் எதிர்காலத்தில் உங்களுடைய அனைத்து விருப்பங்களும் நிறைவேறும் என்று அர்த்தமாம்.
நீங்கள் அரிசி உணவை சாப்பிடுவது போன்று கனவு காண்பதும், ஒரு நல்ல அறிகுறியாகும்.
விருந்தில் சாப்பிடுவதைப் போல காண்பது எதிர்காலத்தில் உங்களுக்கு அதிகம் பணம் வருவதற்கான அறிகுறியாகும்.
நம் வீட்டிற்கு விருந்தினர்களை அழைத்து அவர்களுடன் சாப்பிடுவது போன்று கனவு கண்டால், திடீரென்று ஏதேனும் நோயினால் பாதிக்கப்படப் போகிறீர்கள் என்று அர்த்தம்.
கனவில் நீங்கள் சுவையற்ற உணவுகளோ, பசியுடன் இருப்பதாக வந்தாலோ இது மோசமான அறிகுறியாம். எதிர்காலத்தில் சிரமத்தினையும், பிரச்சினையையும் ஏற்படுவதற்கான எச்சரிக்கை.
நீங்கள் சமைப்பது போல கனவு கண்டால் சிறப்பான நபர் ஒருவர் வரப்போகிறார் என்றும் அவர் நட்பாகவும், உறவாகவும் இருக்கலாம் என்று அர்த்தம்.
உணவு பரிமாறுவது போன்று வரும் கனவு, உங்களால் யாரோ சிறந்த பலனை அடையப்போகிறது மட்டுமின்றி உங்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று அர்த்தம்.
நீங்கள் உங்கள் கனவில் உணவு உண்பது போல கண்டால் உங்கள் முன்னோர்களின் ஆசீர்வாதம் எப்போதும் உங்கள் மீது இருக்கும் என்பதை குறிப்பதுடன், நினைத்த வேலை சிறப்பாக முடியும் என்பது அர்த்தமாம்.
நீங்கள் உங்களுடைய கனவில் உணவை தூர வீசுவது போல கண்டால் எதிர்காலத்தில் நிறைய பணத்தை இழக்க நேரிடும் என்பது அர்த்தம். கனவில் உணவைப் பார்ப்பது வரும் நாட்களில் செல்வத்தைப் பெறுவதற்கான அறிகுறியாகும்.