பாலிவுட் நடிகை கத்ரீனாவிற்கு முன்னாள் காதலர்கள் கொடுத்த திருமண பரிசு என்ன தெரியுமா? தீயாய் பரவும் தகவல்
நடிகை கத்ரீனாவின் திருமணத்திற்கு அவரது முன்னாள் காதலர்கள் பல கோடி செலவு செய்து திருமண பரிசு வழங்கியது இணையத்தில் பயங்கர வைரலாகி வருகின்றது.
பாலிவுட்டில் முன்னனி நடிகையாக திகழ்பவர் கத்ரீனா கைஃப். இவர் ஹிந்தி மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடித்து உள்ளார். இந்நிலையில் கத்ரீனா கைப்பும், விக்கி கவுசாலும் நீண்டகாலமாக காதலித்து வந்திருக்கிறார்கள்.
பின் அனைவரும் எதிர்பார்த்திருந்த இவருடைய திருமணம் ராஜஸ்தானில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. கத்ரீனாவின் திருமணத்திற்கு ரசிகர்களும், பிரபலங்களும் தங்களுடைய வாழ்த்துக்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார்கள்.
இந்த திருமணத்தில் மிக முக்கிய நபர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். ஆனால் இவரின் முன்னாள் காதலருமான நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் சல்மான் கான் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.
இப்படி ஒரு நிலையில் கத்ரீனா கைஃப்பின் திருமண பரிசாக நடிகர் சல்மான் கான் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள ange Rover car ஒன்றை பரிசாக வழங்கியதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அதே போல மற்றொரு முன்னாள் காதலரான ரன்வீர் கபூர் 2. 7 கோடி மதிப்பிலான வைர நெக்லெஸ் ஒன்றை பரிசாக வழங்கி இருக்கிறாராம். இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. திருமணத்திற்காக நடிகை கத்ரீனா கைஃப் அணிந்திருந்த உடை விலை மட்டுமே 17 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.