புரதச்சத்தை அள்ளித்தரும் கருப்பு இட்லி சாப்பிடுங்க: நன்மைகள் ஏராளம்
இந்தியாவில் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் பெரும்பாலும் விளைகின்ற அரிசிதான் இந்த கவுனி அரிசி.
இதில் அதிகளவு நார்ச்சத்தும் ஊட்டச்சத்தும் இருக்கின்றது. மேலும் இதில், இயற்கையாகவே ஆக்ஸிஜனேற்ற சக்தியும் இருக்கிறது. இது நாம் பயன்படுத்தும் வெள்ளை அரிசியிலும் பார்க்க பல நன்மைகளை உடலுக்கு கொடுக்கிறது. மேலும், இதில் அதிகளவான புரதசத்துக்கள் இருப்பதால் உடலில் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு பெரிய பங்காற்றுகிறது.
இப்படி பல நன்மைகளையும் ஆரோக்கிய குணங்களையும் கொண்ட கவுனி அரிசியில் இட்லி செய்து சாப்பிட்டால் இன்னும் அதிக நன்மைகள் உடலுக்கு வந்து சேரும்.
அந்த வகையில் கவுனி அரிசியில் இட்லி செய்வது எப்படி என்பது பற்றி பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கருப்பு கவுனி அரிசி - 4 கப்
முழு உளுந்து - 1 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
கருப்பு கவுனி அரிசியை இரண்டு முறை கழுவி 4 மணி நேரம் ஊறவைக்கவும்.
அதேபோல உளுந்தையும் நன்றாக கழுவி 2 மணிநேரம் ஊற வேக்க வேண்டும்.
இரண்டும் நன்றாக ஊறிய பின்னர் முதலில் மிக்சியில் உளுந்தை மா பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
பிறகு கருப்பு கவுனி அரிசியையும் ரவை பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
பிறகு உப்பு சேர்த்து நன்றாக கலந்து இட்லி செய்ய தேவையான அளவிற்கு புளிக்க வைத்துக் கொள்ள வேண்டும்.
மா புளித்த பிறகு இட்லி செய்தால் ஆரோக்கியமான கருப்பு கவுனி அரிசியில் இட்லி தயார்.