இட்லி மீஞ்சி விட்டதா? தொட்டுக்க இனி குழம்பு தேவையில்லை..ஈஸி ரெசிபி!
பொதுவாக அநேகமான வீடுகளில் காலையுணவாக இட்லி - சாம்பார் செய்வது தான் வழமை.
இவ்வாறு இட்லி செய்யும் போது அது மிஞ்சி விட்டால் அதனை என்ன செய்யலாம் என யோசித்து கொண்டிருப்போம்.
அந்த வகையில் மிஞ்சி போன இட்லியை குழம்பில்லாமல் சாப்பிடுவதற்கு சூப்பரான ரெசிபி எப்படி செய்யலாம் என தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
இட்லி - 6
புளிக்காத புது தயிர் - 3 மேசைக்கரண்டி
மிளகாய்தூள் - அரை மேசைக்கரண்டி
சீரகத்தூள் - அரை மேசைக்கரண்டி
ஓமப்பொடி - 3 மேசைக்கரண்டி
மாதுளம் முத்துக்கள் - சிறிதளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
அரைக்க தேவையான பொருட்கள்
தேங்காய் துருவல் - 3 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 4
முந்திரிப்பருப்பு - 6
தாளிக்க தேவையான பொருட்கள்
கடுகு - அரை தேக்கரண்டி
பெருங்காயம் - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - 1 தேக்கரண்டி
ரெசிபி எப்படி செய்யணும் தெரியுமா?
முதலில் ரெசிபிக்கு தேவையான தயிரை கடைந்து எடுத்து கொள்ள வேண்டும்.
பின்னர் கொத்தமல்லியை எடுத்து சுத்தம் செய்து நறுக்கி கொள்ளவும்.
இதனை தொடர்ந்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்து தயிருடன் சேர்த்து கொள்ளவும்.
கடாயில் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சற்று நேரம் சூடானதும் அதில் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் ஆகியவற்றை சேர்த்த தாளிக்கவும்.
கடைசியாக இட்லியை கிண்ணங்களில் வைத்து அதற்கு மேல் தயிர் ஊற்றி கொத்தமல்லித்தழை, ஓமப்பொடி, மாதுளம் முத்துக்கள், மிளகாய்தூள், சீரகத்தூள் ஆகிய பொருட்களை தூவி இறக்கினால் சுவை அமோகமாக இருக்கும்.