சுகர் பேஷன்ட்டுக்கான தித்திப்பான தினை கருப்பட்டி அல்வா! ருசியோ ருசி..
பொதுவாக வீடுகளில் உள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் இனிப்பு வகைளில் அல்வாவும் ஒன்று.
மேலும் இந்த அல்வாவை திருமண வீடுகள் மற்றும் நிகழ்வு அதிகமாக வைக்கப்படுகிறது. அவ்வளவு இனிப்பு சுவைக் கொண்ட அல்வா எப்படி செய்யலாம் என்பது குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
தினை அரிசி - 200 கிராம்
கருப்பட்டி - 175 கிராம்
முந்திரி - 30 கிராம்
திராட்சை - 30 கிராம்
பாதாம் - 20 கிராம்
பிஸ்தா - 20 கிராம்
நெய் - 100 கிராம்
தண்ணீர் - 200 மி.லி
ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
சுக்கு பொடி - 1 டேபிள் ஸ்பூன்
எப்படி செய்யலாம்?
முதலில் தினை அரிசியை எடுத்து சுமார் 6 மணி நேரம் சுத்தமான குளிர்ந்த நீரில் ஊற வைக்க வேண்டும். இதனை தொடர்ந்து கருப்பட்டியை நன்றாக பொடியாக்கி வைக்க வேண்டும்.
பொடியாக்கிய கருப்பட்டியை நன்றாக தண்ணீர் ஊற்றி, கரைந்து பாகு போன்று கரைத்துக் கொள்ளவும். இதில் சிறியக்கட்டிகள் இல்லாத அளவு கரைத்துக் கொள்ள வேண்டும்.
ஊற வைத்த அரிசி நன்றாக அரைத்து பால் போல் பிளிந்து எடுத்துக் கொள்ளவும். எடுத்து வைத்திருக்கும் பாலை ஒரு பவுலில் ஊற்றி சுமார் 15 நிமிடங்கள் வரை தெளிய விட்டு, பின்னர் மேல் தண்ணீரை எடுத்து விட வேண்டும்.
இதற்கு அடுத்தப்படியாக ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, 200 மி.லி. தண்ணீர் ஊற்றி தினை மா, கருப்பட்டி பாகு சேர்த்து மெதுவாக கலந்து விட வேண்டும். கலந்துக் கொண்டு இருக்கும் போது அல்வா பிரிந்து வரும் அளவிற்கு நெய் ஊற்றி, கலந்துக் கொள்ளவும்.
இதற்கு பாதாம் கலந்துக் கொள்வது சுவையை மெருகுட்டும். இதன்படி, ஒரு டிரேயில் நெய் தடவி பாதாம், பிஸ்தா, முந்திரி தூவி சூடான இறக்கினால் சூடான தினை கருப்பட்டி அல்வா தயார்!