நெஞ்சு சளியை முற்றிலும் நீக்கும் கற்பூரவல்லி... எதற்கெல்லாம் பயன்படுத்தாலாம்?
மூலிகை வகைகளை பொருத்தவரையில் அதிக நறுமணமும், அற்புத மருத்துவ குணங்களும் கொண்டது தான் கற்பூரவள்ளி.
கற்பூரவல்லி தாவரத்தின் பாகங்கள் இருமல், சளி, ஜலதோஷம் போன்ற நோய்களுக்கு தீர்வு கொடுக்கும் முக்கிய மூலிகையாக பார்க்ப்படுகின்றது.
இந்த மூலிகை வியர்வை பெருக்கியாகவும், காய்ச்சலை குணப்படுப்படுத்தவும் துணைப்புரிகின்றது. இதன் மருத்துவ குணங்கள் குறித்து முழுமையாக இந்த பதிவில் பார்க்கலாம்.
மருத்துவ பயன்கள்
கற்பூரவல்லி இலைச் சாற்றை சர்க்கரை கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் இருமல் விரைவில் குணமாகும்.
இலைச்சாறு, நல்லெண்ணெய், சர்க்கரை இவற்றை நன்கு கலக்கி நெற்றியில் பற்றுப் போடத் தலைவலி நீங்கும். உடல் சூட்டைத் தணிக்கும்.
பெரியவர்களில் நாசி நெரிசல் மற்றும் தொண்டை புண் குறைக்க பயன்படுகிறது. ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் அழற்சிக்கு சிகிச்சையளிக்க கற்பூரவள்ளி கலவை பயன்படுத்தப்படுகிறது.
செரிமான கோளாறுகளை நீக்கி பசியை தூண்டுகின்றது. உணவுகளின் சுவைக்காகவும் கற்பூரவள்ளி இலை பயன்படுத்தப்படுகிறது.
சிகரெட் பிடிப்பவர்களுக்கு இந்த இலைகள், ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.காரணம், அதிகப்படியான சிகரெட் பிடிக்கும்போது, நுரையீரல் பாதிக்கப்படும்.
இதுவே பின்னாளில் புற்றுநோய் ஏற்படுவதற்கும் காரணமாக அமையும். அப்படி ஒரு அபாயம் வருவதற்கு முன்பே, இந்த கற்பூரவள்ளி இலையில் சாறு எடுத்து, அதை நன்றாக சுண்டக்காய்ச்சி பாதியளவு எடுத்து வடிகட்டி குடித்து வர வேண்டும்.
இதனால், புகையினால் உண்டான பாதிப்புகளிலிருந்து விடுபடுவதுடன், நுரையீரலின் ஆரோக்கியமும் மேம்படும்.
சிறுநீரகங்களின் ஆரோக்கியத்துக்கும் கற்பூரவள்ளி இலைகள் பெரிதும் துணைப்புரிகின்றது.
வெப்பமண்டல நாடுகளில் ஏடிஸ் எனும் கொசுக்களை விரட்ட கற்பூரவள்ளி தாவரங்கள் அதிகமாக நடப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPPCHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |