சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்து அதிர்ச்சியில் ஆழ்ந்த இளைஞன்! முடிஞ்சா சிரிக்காம பாருங்க
தற்காலத்தில் சமூக ஊடகங்கள் இன்றி யாராலும் ஒரு நாளை கூட முழுமையான கடந்த முடியாத நிலை உருவாகிவிட்டது என்றால் மிகையாகாது.
அந்தளவுக்கு சமூக வலைத்தளங்கள் மனிதர்களின் வாழ்வில் ஒரு முக்கிய அங்கமாகவே மாறிவிட்டது.
மனிதர்கள் தங்களின் மகிழ்சி, துக்கம் என எல்லாவற்றையும் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை வழக்கமாக்கிக்கொண்டுள்ளனர்.
இதில் தீய பக்கம் இருந்தாலும், தனிமையில் இருப்பவர்களுக்கு சமூக ஊடகங்கள் ஓர் வரப்பிரசாதம் என்று தான் கூற வேண்டும்.

அப்படி நாளுக்கு நாள் சமூக ஊடகங்களில் பதிவேற்றப்படும் ஏராளமான காணொளிகளுள் குறிப்பிட்ட சில காணொளிகள் இணையத்தில் வைரலாவது வழக்கம்.
அந்தவகையில், நபரொருவர் தனது காதலிக்கு முதல் aniversaryக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் நோக்கில் ஏதாவது பரிசு வாங்கிக்கொடுக்க நினைத்துள்ளார்.
பின்னர் அந்த பணத்தையே பரிசாக கொடுத்துவிடலாம் என முடிவு செய்து, தனது ஒரு மாத சம்பள பணத்தை ஒரு ஐதரசன் பலூனில் தோரணமாக கட்டி அழகாக எடுத்துவந்து காதலியிடம் கொடுத்து திறக்க சொல்ல, காதலியோ அந்த பெட்டியில் பணம் இருப்பதை அறியாமல், அப்படியே காற்றில் பறக்கவிட்டுவிடுகின்றாள்.
அதன் போது தனது சம்பள பணத்தை காற்றில் விட்டு விட்டு பரிமதாமான முகத்துடன் நிற்பதும், காதலி அவருக்கு ஆறுதல் சொல்வதும் என குறித்த காணொளி இணைத்தில் தற்போது வைரலாகி வருவதுடன் நெட்டிசன்கள் மத்தியில்,சிரிப்பலைகளையும் ஏற்படுத்தி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |