நாள்பட்ட நெஞ்சு சளியை விரட்ட வேண்டுமா? இந்த திலி சாறு செய்தால் போதும்
உணவென்பது ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு விதப்படும். நமக்கு காய்ச்சல் சளி வந்தால் ரசம் வைத்து குடிப்பது வழக்கம். ஆனால் ரசத்திற்கு பதிலாக கர்நாடகாவில் திலி சாறு செய்கின்றனர்.
இதில் பல சரக்கு சாமான்கள் சுவை சரக்கு பொரட்கள் கலந்து செய்யப்படுகின்றது. இதை செய்து குடிக்கும் போது நாள்பட்ட சளிக்கு ஒரு தீர்வு கிடைக்கும்.
உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தால் திலி சாறு குடித்து வர உடலில் நல்ல மாற்றம் தெரியும். ஏனெனில் இது பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் மருத்துவ குணங்கள் கொண்டவை. இந்த பதிவில் திலி சாறு எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
தேவையானவை
- கர்நாடகா மிளகாய் 12
- குண்டூர் மிளகாய் 4
- வெந்தயம் ஒரு ஸ்பூன்
- கடுகு ஒரு ஸ்பூன்
- தனியா 8 ஸ்பூன்
- தக்காளி
- சீரகம் 4 ஸ்பூன்
- மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன்
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் இரண்டு ஸ்பூன்
- நெய்
- கறிவேப்பிலை தேவையான அளவு
- வெல்லம் இரண்டு ஸ்பூன்
- துவரம் பருப்பு 100 கிராம்
- அரிசி வடித்த தண்ணீர்
- மிளகு ஒரு ஸ்பூன்
- கால் ஸ்பூன் பெருங்காய தூள்
செய்முறை
முதலில் பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் வெந்தயம், கடுகு, மிளகு, சீரகம், தனியா போட்டு வறுக்கவும். தனியா நன்றாக வறுபட்ட பதம் தெரிந்தவுடன் மிளகாய்களை போட வேண்டும்.
பின்னர் கறிவேப்பிலை சேர்க்கவும். இதனுடன் மஞ்சள் தூள், பெருங்காய தூள் போடவும். இதை ஆறியவுடன் மிக்ஸியில் அரைத்து தனியே எடுத்து வைக்க வேண்டும்.
இந்த மசாலாவை இனி ஒவ்வொரு முறை திலி சாறு செய்யும் போதும் பயன்படுத்தலாம். பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் நெய் ஊற்றி அது சூடானதும் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் சீரகம், கொஞ்சம் கறிவேப்பிலை, 2 குண்டூர் மிளகாய் சேர்த்து வறுக்கவும்.
பின்னர் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், கொஞ்சம் பெருங்காயத் தூள் சேருங்கள். சின்ன எலுமிச்சை அளவு புளியை தண்ணீரில் கரைத்து ஊற்றவும்.
இதனுடன் துவரம் பருப்பை 3 விசிலுக்கு வேகவிட்டு சேர்க்கவும். அதே போல சாதம் வடித்த தண்ணீர் ஒரு கப் ஊற்றவும். அடுத்ததாக வெல்லம் போடவும்.
தேவையான அளவு உப்பு சேர்த்த பிறகு மிக்ஸியில் அரைத்த திலி சாறு பொடி மூன்று ஸ்பூன் போடுங்கள். ரசம் போல் கொதிக்கவிட்டு எடுக்கவும். இறுதியில் கொத்தமல்லி தூவினால் சுவையான திலி சாறு தயார்.
muttaikose poriyal: புற்றுநோயை செல்களின் வளர்ச்சியை தடுக்கும் முட்டைக்கோஸ் பொரியல்... எப்படி செய்வது?
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |