பாரதியின் தந்தையை கொலை செய்த கண்ணம்மா! கதையில் எதிர்பாராத அதிர்ச்சி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பாவின் ரசிகர்களை எரிச்சலில் ஆழ்த்திய நிலையில், தற்போது வெளியான அதிர்ச்சி ப்ரொமோ ரசிகர்களை தாறுமாறாக சிந்திக்க வைத்துள்ளது.
பாரதி கண்ணம்மா சீசன் 2
பாரதி கண்ணம்மா சீரியல் பல ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருந்த நிலையில், பாரதி கண்ணம்மா சீசன் 2 ஒளிபரப்பாகி வருகின்றது.
இந்த சீரியலில் சித்ரா என்ற கதாபாத்திரத்தில், ஏற்கனவே கண்ணம்மாவாக நடித்த வினுஷாவே நடித்து வருகின்றார். பாரதியாக ரோஜா சீரியல் புகழ் நடிகர் சிப்பு நடித்து வருகின்றார்.
சித்ரா என்ற பெயரில் சிறையிலிருந்து வெளியே வரும் கண்ணம்மா எதிர்பாராத சந்தர்ப்பத்தினால் கண்ணம்மா மாறியுள்ளார்.
மேலும் பாரதியுடன் சண்டையிட்டுக்கொண்டிருந்த இந்த ஜோடிக்குள் தற்போது புதுவித கெமிஸ்ட்ரி ஓடத் தொடங்கியுள்ளது. ஆம் இருவரும் சண்டையில்லாமல் இருந்து வருவதுடன், அவ்வப்போது ரொமான்ஸ் செய்து வெண்பாவையும் எரிச்சலூட்டவும் செய்கின்றனர்.
இந்நிலையில் பிரபல ரிவி தற்போது ப்ரொமோ ஒன்றினை வெளியிட்டுள்ளது. இதில் கண்ணம்மா குழந்தையாக இருந்த போது பாரதியின் தந்தை அவரிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றதால், தன்னை காப்பாற்றிக் கொள்ள கண்ணம்மா பாரதியின் தந்தையை பிடித்து தள்ளிவிடுகின்றார்.
இதில் சுவற்றில் பின் தலை அடிபட அதில் இருந்த ஆணி அவரது தலையில் குத்தி இறந்துள்ளார். கண்ணம்மா ஜெயலுக்கு சென்ற காரணம் என்ன என்பது ரசிகர்களுக்கு தெரியவந்துள்ளது.
மற்றொரு புறம் பாரதியும், அவரது அம்மாவும் கொலை செய்தவரை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கில் காணப்படுகின்றது.