புதிய பரிமாணத்தில் பாரதி கண்ணம்மா 2! வெளியான கலக்கல் ப்ரொமோ
பிரபல ரிவியில் பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது முடிவு பெறும் நிலையில், இதன் இயக்குனர் புதிய டுவிஸ்ட் ஒன்றினை வைத்துள்ளார்.
பாரதி கண்ணம்மா
பாரதி கண்ணம்மா சீரியல் பல ஆண்டுகளாக பிரபல ரிவியில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இதில் அருண் மற்றும் ரோஷினி முக்கிய கதாபத்திரத்தில் நடித்த நிலையில், இதிலிருந்து ரோஷினி வெளியேறிய பின் வினுஷா கண்ணமாக நடித்து வருகின்றனர்.
இந்த தொடரின் கிளைமேக்ஸ் நிகழ்விற்காக மக்கள் அதிகமாக காத்திருந்த நிலையில், ஒருவழியாக பாரதியும் கண்ணம்மாவும் ஒன்று சேர்ந்ததுடன், இவர்களுக்கு மீண்டும் திருமணமும் நடைபெற்றுள்ளது.
குறித்த சீரியலுக்கு எண்ட் கார்டு போடப்பட்டுவிட்டது என்று நினைத்திருந்த மக்களுக்கு தற்போது பகீர் கிளப்பும் ப்ரொமோ ஒன்று வெளியாகியுள்ளது.
பாரதி கண்ணம்மா 2
இந்நிலையில் பாரதி கண்ணம்மா 2 தொடரின் முதல் புரொமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் கண்ணம்மாவாக வினுஷாவே நடிக்க, பாரதியாக சன் டிவி ரோஜா சீரியல் புகழ் சிப்பு பாரதியாக இந்த தொடரில் நடிக்கிறார்.
ஏற்கனவே சிப்பு குறித்த சீரியலில் நடிக்கவிருக்கின்றார் என்ற தகவல் வெளியான நிலையில், தற்போது உறுதிப்படுத்தும் விதமாக பிரபல ரிவி ப்ரொமோவை வெளியிட்டு்ள்ளது.
இதில் பாரதியின் தாயாக சௌந்தர்யா கதாபாத்திரத்தில் நடித்த நடிகை கணவர் இல்லாமல் இருப்பது போன்று குறித்த சீரியலில் காட்டப்பட்டுள்ளது.