kanda sashti special: நாவூறும் சுவையில் திருபாகம்... வெறும் பத்தே நிமிடத்தில் செய்யலாம்!
திருப்பாகம் என்பது திருநெல்வேலியில் மிகவும் பிரபலமான ஒரு ஹல்வா வகை இனிப்பாகும். இது முருகப்பெருமானுக்கு மிகவும் பிடித்த இனிப்பு என்ற நம்பிக்கையும் இந்து மதத்தை பின்பற்றும் மக்கள் மத்தியில் பரவலாக காணப்படுகின்றது.
மகா கந்த சஷ்டி நாளில் முருகப்பெருமானுக்கு பிடித்த இந்த இனிப்பை செய்து வைத்து வழிபடுவது கூடுதல் நன்மைகளை கொடுக்கும் என்ற நம்பிக்கையும் உண்டு.

அந்தவகையில், நாவூறும் சுவையில் திருபாகம் வெறும் பத்தே நிமிடத்தில் எவ்வாறு எளிமையாக செய்வதென இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
நெய்
முத்திரி
கடலை மாவு
பால்
ஏலக்காய் பொடி
சர்க்கரை

செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும், அரை கப் நெய் மற்றும் ஒரு கப் அளவுக்கு கடலை மாவு சேர்த்து மிதமாக தீயில், வைத்து பச்சை வாசணை போகும் அளவுக்கு நன்றாக வருத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு கப் அளவுக்கு முந்திரி பருப்பை ஒரு மிக்சி ஜாரில் போட்டு நன்றான பொடியாக்கி, அந்த கலவையுன் சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும்.

பின்னர் ஒரு கப் அளவுக்கு காய்ச்சி ஆறவைத்த பால் சேர்த்து, நன்றாக கிளறிவிட வேண்டும்.
இந்த கலவை நன்றாக கெட்டிப்பட ஆரம்பித்ததும், ஒரு தேக்கரண்டி அளவுக்கு ஏலக்காய் பொடி மற்றும் ஒரு கப் சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும்.
இறுதியான 2 தேக்கரண்டி நெய் சேர்த்து இறக்கினால் அவ்வளவு தான் நாவூரும் சுவையில், முருகனுக்கு பிடித்த திருப்பாகம் தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |