உங்க கணவர் உங்களை ஏமாற்றுகிறார் என்பதற்கான அறிகுறிகள் இதுதான்? உஷாரா இருங்க!
பொதுவாகவே அனைவரும் திருமணவாழ்க்கை மகிழ்சியாகவும் சுவாரஸ்யம் நிறைந்ததாகவும் இருக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள்.
தங்கள் மனதுக்கு பிடித்தவர்கள் தங்களின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும் எனவும் தங்கள் சொல்வதை கேட்க வேண்டும் எனவும் நினைப்பது மிகவும் சாதாரணமான விடயம் தான்.

ஆனால் அவ்வாறான ஒரு துணை கிடைப்பது தான் அசாத்தியமானது. தற்காலத்தின் பாலின வேறுபாடுகள் இன்றி ஆண், பெண் இருபாலாருமே திருமணத்துக்கு மீரிய உறவுகளில் சிக்கிக்கொள்ளும் நிலை காணப்படுகின்றது.
அதற்கு சமூகவலைத்தளங்களின் பெருக்கம், நவீன கலாசாரங்கள் உருவாகிவருகின்றமை போன்ற பல்வேறு காரணங்கள் தாக்கம் செலுத்துகின்றது.

எவ்வாறாயினும் திருமண பந்தத்தில் இணைந்த பின்னர், கணவன் அல்லது மனைவி அதில் யார் திருமணத்தை மீறிய உறவில் ஈடுபாடு காட்டினாலும் பாதிக்கப்படபோவது இருவரின் வாழ்க்கையும் தான்.
குறிப்பாக குழந்தைகள் பெற்ற பின்னர் ஏற்படும் திருமணத்தை மீறிய உறவுகளால் அதிக பாதிப்பு அவர்களின் குழந்தைகளுக்கு தான் என்றால் மிகையாகாது.
அந்தவகையில் உளவியல் ஆய்வுகளின் அடிப்படையில் ஆண்கள் தங்கள் துணையை ஏமாற்ற ஆரம்பித்துவிட்டார்கள் என்பததை உணர்த்து முக்கிய நடத்தை மாற்றங்கள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

முக்கிய நடத்தை மாற்றங்கள்
உங்கள் கணவர் வழக்கத்திற்கு மாறாக இரவில் தாமதாக வீட்டுக்கு வரும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்கின்றார் என்றால், இது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அல்லது விடுமுறை நாட்களில் கூட அலுவலகம் செல்ல வேண்டுமென்று கூறிகின்றார் என்றால், அது அவர் உங்களை ஏமாற்ற ஆரம்பிப்பதன் முதல் எச்சரிக்கை மணியாக இருக்கக்கூடும்.
காரணம் திருமணத்துக்கு அப்பாற்பட்ட ஒருவரை சந்திக்க அல்லது அவர்கள் நேரம் செலவிட அலுவலகத்தை ஒரு காரணமாகக் கூற ஆரம்பிப்பார்கள். இவ்வாறு கூறிவிட்டு புதிய துணையுடன் நேரம் செலவிட முயற்ச்சி செய்யலாம்.

இன்றைய உலகில், நமது தொலைபேசிகளில் குறுஞ்செய்தி, அழைப்பு பதிவுகள், மின்னஞ்சல்கள் மற்றும் தனிப்பட்ட சமூக ஊடக செய்திகள் கூட உள்ளன. உங்கள் கணவர் எப்போதும் தனது தொலைபேசி பயன்பாட்டைப் பற்றி வெளிப்படையாக இருந்து, திடீரென்று மிகவும் பாதுகாப்பாக மாறினால், அது அவர் உங்களை ஏமாற்ற முயற்சிக்கின்றார் என்பதற்கான ஒரு முக்கிய அறிகுறியாக இருக்கலாம்.
உணர்ச்சி ரீதியான நெருக்கத்தையும் உடல் ரீதியான நெருக்கத்தையும் மனைவியுடன் தவிர்க்கும் ஒரு கணவர் புதிய உறவில் இருப்பதற்கு அதிக வாய்ப்பு காணப்படுகின்றது.

ஒரு ஆண் தனது ஆற்றல், அன்பு மற்றும் ஆர்வத்தை வேறொரு நபரிடம் முதலீடு செய்யும்போது, குற்ற உணர்ச்சியின் காரணமாகவோ அல்லது அவரது உணர்ச்சி ரீதியான தொடர்பு வேறு எங்காவது நிறைவேற்றப்படுவதாலோ அவர் தனது மனைவியிடமிருந்து விலகக்கூடும்.
திருமணத்திற்குப் புறம்பான உறவை ஒரு ஆண் மறைக்க முயற்சிக்கும் பட்சத்தில்,அவர்கள் சந்திக்கும் நபர்களைப் பற்றியும், அவர்களின் அன்றாட செயல்பாடுகள் பற்றியும் பொய் சொல்லத் தொடங்குவார்கள் அல்லது அவற்றை மறைக்கத் ஆரம்பிக்கின்றார்கள். இது தவறான உறவுகளில் சிக்கிக்கொள்வதற்கான முக்கிய அறிகுறியாக பார்க்கப்படுகின்றது.

வேலை தேவைகளும் சமூகக் கடமைகளும் ஒரு ஆணின் நடத்தையை மாற்றக்கூடும் என்றாலும், வழக்கத்திற்கு மாறாக ஏற்படும் திடீர் மற்றும் விவரிக்க முடியாத மாற்றம் ஏதோ தவறு இருப்பதையே உணர்த்துகின்றது.
குறிப்பாக அதுவரை குடும்பஸ்தனாக இருந்தவர்கள் திடீரென தங்கள் குடும்பத்தினர் புகைப்படங்களை சோசியல் மீடியாக்களிலிருந்து நீக்குவது. வாட்சப் டிபியில் கூட அவர்களின் புகைப்படத்தை மட்டும் வைப்பது போன்ற நடத்தைகள் அவர்கள் இன்னொரு துணையின் மீது ஈடுபாடு காட்டுடுவதற்கான முக்கிய அறிகுறிகளாகும்.
பொதுவெளியில் தங்களுக்கென யாருமே இல்லாதது போலவும், அவர்கள் மிகவும் இளமையானவர்கள் போலவும் காட்டிக்கொள்ளத் தொடங்குவார்கள். உதாரணமாக தங்களின் உடல் அமைப்பை சீராக்க முயற்சிப்பது ஜிம்முக்கு போவது போன்றவற்றை திடீர் என செய்ய விரும்புகின்றார்கள் என்றால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ஒருவர் ஏமாற்றும்போது, அவர்கள் பெரும்பாலும் பழியை மற்றவர் மீது மாற்ற முயற்சி செய்கிறார்கள் அல்லது துரோகத்தை சந்தேகித்ததற்காக தங்கள் துணையை குற்ற உணர்ச்சியடையச் செய்கிறார்கள். உங்கள் கணவர் திடீரென்று அதிக கோபமாகவோ, தற்காப்புக்காகவோ அல்லது உணர்ச்சி ரீதியாக கணிக்க முடியாதவராகவோ மாறனால் இவர் வேறு ஒரு உறவில் இருக்கின்றார் என்பதை 80 சதவீதம் உறுதியாக சொல்லலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |