உலக நாயகனை கட்டித்தழுவிய சூப்பர் ஸ்டார்... என்ன காரணம் தெரியுமா? இணையத்தை ஆக்கிரமிக்கும் புகைப்படங்கள்
உலகநாயகன் கமல்ஹாசனைக் கண்ட சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மகிழ்ச்சியில், அவரை கட்டித்தழுவிக் கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
தமிழ் சினிமாவின் சின்னமான கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த், ரசிகர்களால் பெரும்பாலும் போட்டியாளர்களாகக் கருதப்படுபவர்கள், நட்பு என்பது போட்டியைத் தாண்டியது என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகின்றனர்.
21 வருடங்களின் பின்னர்...
லைகா புரொடக்சன்ஸ் சுபாஸ்கரன் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படமும், லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் தயாராகும் தலைவர் 170 படமும் சென்னையில் ஒரே அரங்கில் அருகருகே நடைபெற, அங்கு பல வருடங்களுக்குப் பிறகு ஒரே இடத்தில் படப்பிடிப்பில் சந்தித்து ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் தங்கள் அன்பைப் பரிமாறிக் கொண்டனர்.
உலக நாயகன் கமல்ஹாசனின் நடிப்பில், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், உலகெங்கும் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் “இந்தியன் 2” லைகா புரொடக்சன்ஸ் சுபாஸ்கரன் & ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் உருவாகி வருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டூடியோ அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அருகில் இருக்கும் மற்றொரு அரங்கில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகும், தலைவர் 170 படத்தின் படப்பிடிப்பும் அங்கு நடைபெறுகிறது.
உலகநாயகன் கமல்ஹாசனின் இந்தியன் 2 படப்பிடிப்பு நடப்பதை அறிந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், இந்தியன் 2 ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு கமல்ஹாசனைச் சந்திக்க வருவதாகத் தெரிவித்துள்ளார். இதனையறிந்த உலகநாயகன் கமல்ஹாசன் “என் நண்பனைச் சந்திக்க நானே வருகிறேன்” என காலை 8 மணிக்கே உடனடியாக தலைவர் 170 ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு விசிட் செய்துள்ளார்.
உலகநாயகன் கமல்ஹாசனைக் கண்ட சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மகிழ்ச்சியில், அவரை கட்டித்தழுவிக் கொண்டார். இருவரும் தங்கள் அன்பைப் பரிமாறிக்கொண்டனர். இந்தியத் திரையுலகின் மாபெரும் உச்ச நட்சத்திரங்களின் இந்த நட்பும் அன்பும் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
முன்னதாக பாபா, பஞ்சதந்திரம் படங்கள் இதே இடத்தில் ஷூட்டிங் நடைபெற்ற போது, இருவரும் சந்தித்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 21 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இருவரும் ஒரே படப்பிடிப்பு தளத்தில். சந்தித்துள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் காட்டு தீ போல் பரவி வருகின்றது.
The 2 unparalleled LEGENDS of Indian Cinema 'Ulaganayagan' @ikamalhaasan & 'Superstar' @rajinikanth sharing a lighter moment while shooting for their respective films Indian-2 & Thalaivar170 in the same studio after 21 years! ?✨
— Lyca Productions (@LycaProductions) November 23, 2023
And we @LycaProductions are super happy & proud… pic.twitter.com/8cKcqGwitV
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |