இந்தியாவின் பணக்கார காமெடி நடிகர் இவர் தானாம்... சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
தென்னிந்திய திரையுலகின் காமெடி ஜாம்பவானாக இருக்கும் நடிகர் பிரம்மானந்தத்தின் சொத்து மதிப்பு குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் பிரம்மானந்தம்
1985 இல் ஸ்ரீ தடவதாரம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார்.
சத்யநாராயணா வெஜெல்லா இயக்கிய இந்தப் படம் 1988 இல் வெளியானது. இதைத் தொடர்ந்து பிரம்மானந்தம் தனது இரண்டாவது படமான சத்தியாகிரகத்தில் நடித்தார். சாந்தப்பாய் படத்தின் படப்பிடிப்பின் போது, பிரபல நடிகரான சிரஞ்சீவியுடன் பிரம்மானந்தம் அறிமுகமானார்.
அவர் தனது மிமிக்ரி திறமையை அவரிடம் வெளிப்படுத்தினார், இதனால் அவர் பெரிதும் ஈர்க்கப்பட்டார். எனவே, சிரஞ்சீவி பிரம்மானந்தத்தை சென்னைக்கு வரவழைத்து, அவருக்கு படங்களில் நடிக்க வாய்ப்புகளைப் பெற உதவுவியதாக இவர் குறிப்பிட்டுள்ளார்.
இவர் தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலம் வாய்ந்த காமெடி நடிகர் என்றாலும் கூட, தமிழ், கன்னடம் என கிட்டதட்ட 1000 படங்களுக்கும் மேல் தனது திரை வாழ்க்கையில் நடித்துள்ளார்.
தற்போது 67 வயதாகும் நடிகர் பிரம்மானந்தம் தற்போது மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 1987ல் தனது திரை பயணத்தை துவங்கிய நடிகர் பிரம்மானந்தம் இன்று வரை பிசியாக வலம் வருகிறார்.
சொத்து மதிப்பு
இந்நிலையில் ரூ.2 கோடிக்கு மேல் மாதச் சம்பளம் வாங்கும் பிரம்மானந்தாவின் மொத்த சொத்து மதிப்பு ரூ.490 கோடி ஆகும். மேலும் இவர் இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் ஆவார்.
அவர் தனது திரைப்படப் பாத்திரங்களுக்கு ரூ 1 கோடி முதல் ரூ 2 கோடி வரையிலும், பிராண்ட் ஒப்புதல்களுக்கு ரூ 1 கோடி வரையிலும் வசூலிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |