ஒருவரையும் பேச விடாமல் அசீம் செய்த காரியம்! கொந்தளித்த கமலின் அதிரடி
பிக்பாஸ் நிகழ்ச்சியில் அசீம் எந்தவொரு போட்டியாளர்களையும் பேச விடாமல் பேசியது கமலை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
கோபத்தில் கமல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 7 போட்டியாளர்கள் மட்டுமே உள்ள நிலையில், 80 நாட்களைக் கடந்து சென்று கொண்டிருக்கின்றது.
இதில் அசீமின் நடவடிக்கை அனைத்து போட்டியாளருக்கு பிடிக்காத நிலையில், வாக்குவாதம் அதிகமாகவே இருந்து வருகின்றது.
அதிலும் ஏடிகே மற்றும் அசீம் இருவருக்கும் டாஸ்க் தருணத்தில் மட்டுமின்றி சாதாரண நேரத்திலும் வாக்குவாதம் அரங்கேறி வருகின்றது.
பெர்ஷ்னல் அட்டாக் செய்யும் நபர் குறித்து கமல் கேட்கையில், அனைத்து போட்டியாளர்களும் அசீம் பெயரைக் கூறியுள்ள நிலையில், அசீம் அதற்கும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
உடனே கடுப்பான கமல்ஹாசன் அசீமை கடுமையாக பேசி வாயடைக்க வைத்துள்ளார்.