மகனுடன் அட்டகாசமான அழகில் நடிகை காஜல்! எடுத்த அதிரடி முடிவு
நடிகை காஜல் அகர்வால் தனது மகனுக்காக முக்கியமான முடிவினை எடுத்துள்ளதை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
நடிகை காஜல் அகர்வால்
தமிழ், தெலுங்கு மொழி படங்களில் படு பிசியாக நடித்து வந்தவர் நடிகை காஜல் அகர்வால். தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சூர்யா, தனுஷ், கார்த்தி என முன்னணி நடிகர்களின் படங்களில் காஜல் அகர்வால் நடித்துள்ளார்.
இவர் கடந்த 2020ஆம் ஆண்டு கவுதம் கிச்லு என்பவரை திருமணம் செய்து செய்துகொண்டார். ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வந்த காஜல், கர்ப்பமான நிலையில் இப்படத்திலிருந்து விலகியதோடு, வேறு படத்திலும் நடிப்பதற்கு ஒப்பந்தமாகாமல் இருந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காஜல் அகர்வாலுக்கு நீல் கிச்லு என்ற ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தற்போது அந்த குழந்தையை வளர்ப்பதில் காஜல் முழு கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு காஜல் மகனின் புகைப்படத்தை சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

காஜல் எடுத்த முடிவு
தற்போது காஜல் ஒரு முக்கிய முடிவு எடுத்துள்ளார். இந்நிலையில் தற்போதும் அவருக்கு பட வாய்ப்புகள் வந்த வண்ணமே உள்ளது. ஆனால் காஜல் அகர்வால் தற்போது தன் மகனை பார்த்துக் கொள்வதில் கவனம் செலுத்துவதாக கூறியுள்ளாராம்.
மேலும் ஒரு வருடத்திற்கு எந்த படத்திலும் நடிக்க மாட்டேன் என தன்னை நாடி வரும் இயக்குனர்களிடம் திட்டவட்டமாக கூறிவிட்டாராம்.
கல்யாணமான நடிகைகளுக்கு தற்போது வாய்ப்பு கிடைப்பதில்லை. ஆனால் குழந்தை பெற்றுக் கொண்ட பிறகும் வரும் வாய்ப்பை தனது மகனுக்காக காஜல் மறுத்துள்ளார்.
