பிறந்த குழந்தையை நினைத்து உருக்கத்துடன் காஜல் அகர்வால் வெளியிட்ட முதல் பதிவு!
நடிகை காஜல் அகர்வாலுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. கடந்த 2020-ம் ஆண்டு இறுதியில் கவுதம் கிச்சிலு என்கிற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்துக்கு பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த காஜல் அகர்வால், கடந்தாண்டு கர்ப்பமானார். இந்நிலையில், கடந்த நாளில் காஜலுக்கு அழகிய ஆண்குழந்தை பிறந்தது.
இத்தம்பதிக்கு பிறந்த முதல் குழந்தை என்பதால் இருவரும் மிகுந்த உற்சாகம் அடைந்தனர். இந்த செய்தி அறிந்ததும் சமூக வலைதளங்களில் நடிகை காஜல் அகர்வால் - கவுதம் கிச்சிலு தம்பதிக்கு வாழ்த்துக்கள் குவிந்தன.
தொடர்ந்து, குழந்தைக்கு தந்தை கவுதம் கிச்சில, நீல் கிச்சிலு (Neil kitchlu) என பெயரிட்டுள்ளதாக தெரிவித்தார். இதனிடையே, காஜல் அகர்வால் தற்பொது வெளியிட்டுள்ள புகைப்பட தகவலின்படி, “என் குழந்தை நீலை இந்த உலகத்திற்கு வரவேற்பதில் மகிழ்ச்சியும், உற்சாகமும், மகத்தானதாகவும், பொறுமையானதாகவும் இருந்தது.
காஜல் அகர்வாலின் மகிழ்ச்சி பதிவு
நீல் பிறந்த வினாடிக்குள் எனது நஞ்சுக்கொடியில், மார்பில் அவரைப் பிடித்துக்கொள்வது ஒரு உணர்ச்சிக்கரமான நிகழ்வு. அவை விவரிக்க முடியாடஹ் ஒரு உணர்வு.
அந்த ஒரு கணம், எனக்கு அன்பின் ஆழமான திறனை புரியவைத்தது. நிச்சயமாக இது எளிதானது அல்ல, தூக்கமில்லாத, 3 இரவுகள், இரத்தகசிவு என இருந்த நிலையில், விடியற்காலை இனிமையான அரவணைப்பு அற்புதமான பயணங்களை மேற்கொள்கிறோம்.
உண்மையில், பிரசவத்திற்கு பிறகு கவர்ச்சியாக இல்லை ஆனால், அது நிச்சயமாக அழகாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
பேரீச்சம்பழத்தை பாலில் ஊறவைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?